கோலாலம்பூர்,
மலேசிய எல்லைக்காவல் மற்றும் பாதுகாப்பு அமலாக்கப் பிரிவு (AKPS) நேற்று குலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் (KLIA) டெர்மினல் 1-இல் சிறப்பு சோதனையில் சிக்கிய 99 வெளிநாட்டவர்களுக்கு நுழைவுத் தடை விதித்தது.
விலை மலிவான டிக்கெட்டுகளை வாங்கி பயணிக்கும் விமானங்களில் பயனிப்போரை குறிவைத்த 7 மணி நேர சிறப்பு சோதனை நடவடிக்கையில் 400க்கும் மேற்பட்ட பயணிகள் பரிசோதிக்கப்பட்டதிலிருந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக AKPSபிரிவு அறிக்கை வெளியிட்டது.
“நுழைவுத் தடை பெற்ற 99 பேரும் ஆண்கள். அவர்களில் 80 பேர் பங்களாதேஷ், 10 பேர் இந்தியா மற்றும் 9 பேர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்கள் மலேசியாவில் சுற்றுலா அல்லது வருகைக்கான நம்பத்தகாத காரணங்கள் மற்றும் பயண பதிவுகள் ஆகியவற்றில் சந்தேகத்திற்கு இடமளித்ததால், குடிவரவு சோதனையில் தோல்வியுற்றனர்,” என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும், அவர்கள் விரிவான ஆவண பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், சட்டப்படி தங்கள் சொந்த நாடுகளுக்கு நாடுகடத்தப்பட்டனர்.
இந்த சோதனைகள் பயண ஆவணங்கள், பின்னணி சரிபார்ப்பு மற்றும் தனிநபர் நேர்காணல்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாகவும், மனிதக் கடத்தல் மற்றும் visit Pass வழி தவறான பயன்பாடுகளை கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் இந்த Enforcement நடவடிக்கைகள் அடிக்கடி மேற்கொள்ளப்படும் என்றும் AKPS வலியுறுத்தியுள்ளது.

























