தாய்லாந்து – கம்போடியா எல்லையில் பதற்றம்: மலேசியர்களுக்கு எச்சரிக்கை அறிவுறுத்தல்

தற்போது தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையிலான எல்லைப் பகுதியில் நிலவும் பதற்றமான சூழ்நிலையை முன்னிட்டு, தாய்லாந்தில் உள்ள மலேசியர்களுக்கு முக்கியமான பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்தின் வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் உள்ள ஏழு முக்கிய சுற்றுலா தலங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள நிலையில், தாய்லாந்தில் உள்ள மலேசிய தூதரகம் இதை உறுதி செய்து, உரிய ஆலோசனையையும் வழங்கியுள்ளது.

“கம்போடியா எல்லையை அண்டிய பகுதிகளுக்கு பயணம் செய்யாமல் இருக்க வேண்டும். ஏற்கனவே அந்தப் பகுதிகளில் இருப்பவர்கள், தடை செய்யப்பட்ட அல்லது பாதுகாப்பு இல்லை என அறிவிக்கப்பட்ட பகுதிகளைத் தவிர்த்து, தங்கள் பயணத் திட்டங்களை மிகுந்த கவனத்துடன் திட்டமிட வேண்டும்,” என அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், தாய்லாந்தில் உள்ள மலேசியர்கள், ள்ளூர் ஊடகங்கள், தாய்லாந்து அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள், மலேசியத் தூதரகத்தின் சமூக ஊடக சேனல்கள் வழி நிலவரங்களை தொடர்ந்து கவனிக்குமாறு கூறப்பட்டுள்ளது.

இத்தகைய எச்சரிக்கைகள், தாய்லாந்து-கம்போடியா எல்லைப் பகுதியில் கடைசி நாட்களில் ஏற்பட்ட பாதுகாப்பு சிக்கல்கள் மற்றும் மோதல்களை அடுத்து வெளியிடப்பட்டுள்ளன.

பாதுகாப்பான பயண அனுபவம் மற்றும் மலேசியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here