சாரா கைரீனா மரண விசாரணை முடிவடைந்தது – அடுத்த வாரம் சட்டத்துறை தலைவர் அலுவலகத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும்

பெட்டாலிங் ஜெயா,

சபா மாநில பாபார் பள்ளி விடுதியில் உயிரிழந்த 13 வயது மாணவி சாரா கைரீனா மகாதீர் தொடர்பான போலீஸ் விசாரணை முடிவடைந்துள்ளதாக உள்துறை அமைச்சர் சைபுடின் நாசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

இந்த விசாரணை அறிக்கை, அதிகபட்சமாக அடுத்த வாரம் மலேசிய சட்டத்துறை தலைவர் அலுவலகத்திற்கு (AGC) சமர்ப்பிக்கப்படும் என அவர் தெரிவித்ததாக பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்தது.

“விசாரணை முடிந்துவிட்டது. அதிகம் தாமதிக்காமல் அடுத்த வாரத்தில் போலீசார் விசாரணை அறிக்கையை சமர்ப்பிப்பார்கள் என நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

பஹாங் குவாந்தானில் நடைபெற்ற மலேசிய கடல்சார் அடிப்படை பயிற்சி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற பிறகு சைபுடின் நாசுத்தியோன் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.

இந்த வழக்கு தொடர்பாக 60 சாட்சிகளிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

ஜூலை 16ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் சாரா கைரீனா, பாபார் மதுபாடசாலை ஹாஸ்டல் மூன்றாம் மாடியில் இருந்து விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். அடுத்த நாள், கோத்தா கினபாலுவில் உள்ள குயின் எலிசபெத் I மருத்துவமனையில் உயிரிழந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here