கடந்த 10 ஆண்டுகளில் சுமார் ஒரு லட்சம் மலேசியர்கள் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றனர் – உள்துறை அமைச்சகம்

கோலாலம்பூர்,

2015 முதல் 2025 ஜூன் மாதம் வரை, மொத்தம் 97,318 மலேசியர்கள் தங்கள் குடியுரிமையை இரத்து செய்து, சிங்கப்பூர் குடியுரிமையை பெற்றுள்ளனர் என்று உள்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் Datuk Seri Takiyuddin Hassanனின் கேள்விக்கு எழுத்துப்பூர்வ பதிலளித்த அமைச்சகம், வருடாந்திர புள்ளிவிவரங்களையும் வெளியிட்டுள்ளது.

2015: 7,394 பேர்

2016: 8,654 பேர்

2017: 7,583 பேர்

2018: 7,665 பேர்

2019: 13,362 பேர்

2020: 5,591 பேர்

2021: 7,956 பேர்

2022: 5,623 பேர்

2023: 11,500 பேர்

2024: 16,930 பேர் (அதிகபட்சம்)

2025 ஜனவரி – ஜூன்: 6,060 பேர்

மலேசியா, பல ஆண்டுகளாக Brain Drain பிரச்சினையை எதிர்கொண்டு வருகிறது. கடந்த ஐந்து தசாப்தங்களில் சுமார் 1.86 மில்லியன் மலேசியர்கள் வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையை சமாளிப்பதற்காக, திறமையான நிபுணர்கள் நாடு திரும்ப ஊக்குவிக்கும் நோக்கில் TalentCorp நிறுவப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here