பெட்டாலிங் ஜெயா: மின்சாரம் முழுமையாக மீட்கப்பட்டது!

கோலாலம்பூர்:

இன்று காலை, பெட்டாலிங் ஜெயா (Petaling Jaya) நகரின் பல பகுதிகளில் ஏற்பட்ட மின் தடை, முழுமையாகச் சீரமைக்கப்பட்டு, மின்சாரம் மீண்டும் வழக்கு நிலைக்கு திரும்பியதாக தெனகா நேஸனல் பெர்ஹாட் (TNB) நிறுவனம் அறிவித்துள்ளது.

இதனிடையே, மின் சீரமைப்புப் பணிகளின்போது ஒத்துழைப்பு அளித்த வாடிக்கையாளர்களுக்கு TNB, இன்று பிற்பகல், X (டுவிட்டர்) தளத்தில் நன்றி தெரிவித்தது.

அத்துடன், இந்த மின் தடையால் ஏற்பட்ட சிரமங்களுக்கு மன்னிப்பும் கோரியது.

“இந்தச் சிரமத்திற்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்,” என்று TNB குறிப்பிட்டது.

இன்று அதிகாலை, ஆரா டாமன்சாரா (Ara Damansara), கெலானா ஜெயா (Kelana Jaya), முத்தியாரா டாமன்சாரா (Mutiara Damansara), கோத்தா டாமன்சாரா (Kota Damansara), பண்டார் உத்தாமா (Bandar Utama) போன்ற பகுதிகளில் மின்சாரம் தடைபட்டதாக, குடியிருப்பாளர்கள் சமூக வலைத்தளங்களில் புகார் தெரிவித்தனர்.

மின் தடை ஏற்பட்ட பகுதிகளை TNB குறிப்பிடவில்லை என்றாலும், அதன் தொழில்நுட்பக் குழுவினர் சீரமைப்புப் பணிகளைச் செய்ய அனுப்பப்பட்டதாகக் கூறியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here