Black Hawk ஒப்பந்தம் ரத்து: புதிய ஹெலிகாப்டர் டெண்டர் அறிவிப்பு

கோலாலம்பூர்:

அரச மலேசிய இராணுவ விமானப் பிரிவுக்கு (PUTD) நான்கு ஹெலிகாப்டர்களை வாடகைக்கு எடுப்பதற்கான புதிய டெண்டரை பாதுகாப்பு அமைச்சு மீண்டும் தொடங்கியுள்ளது.

அதுமட்டுமின்றி முன்னதாக, ஒரு நிறுவனம் Black Hawk ஹெலிகாப்டர்களை உரிய நேரத்தில் வழங்கத் தவறியதால், அந்த ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டது என்று பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் காளிட் நோர்டின் (Datuk Seri Mohamed Khaled Nordin) தெரிவித்தார்.

இதனிடையே, புதிய டெண்டர் ஒப்பந்தம் , செப்டம்பர் மாதம் நிறைவடைகிறது. இந்த ஒப்பந்தம், ஹெலிகாப்டரின் வகை, வயது, விலை, ஆயுட்காலம், பாதுகாப்பு போன்ற காரணிகள் மதிப்பீடு செய்யும்.

மேலும், 30 ஆண்டுகளுக்கும் மேலான பழைய Black Hawk ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்துவதற்கு எதிராக, மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் (Sultan Ibrahim) பிறப்பித்த உத்தரவுக்கு இணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, ஒப்பந்தத்தை நிறைவேற்றத் தவறிய நிறுவனத்திற்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அதன் செயல்திறன் பிணைப்பத்திரமும் (performance bond) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

குவாந்தானில் (Kuantan) அரச மலேசிய விமானப்படையின் (RMAF) F/A-18D ஹார்னெட் (Hornet) எனும் போர் விமானம் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, ஒரு சிறப்பு விசாரணை வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புச் சோதனைகள் நடைபெறும் வரை, அனைத்து விமானங்களும் தற்காலிகமாக இயக்கப்படாது என்றும் அமைச்சர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here