செயற்கை நுண்ணறிவில் நாம் பின்தங்கக்கூடாது: பிரதமர்

கோலாலம்பூர்:

செயற்கை நுண்ணறிவு (A.I) கற்றல் மற்றும் அதில் தேர்ச்சி பெறுதல் தொடர்பில் மலேசியா எந்த சூழ்நிலையிலும் பின்தங்கக்கூடாது என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.

உலகளாவிய இலக்கவியல் மாற்றங்களை எதிர்கொள்ள மலேசியா மீண்டெழும் சக்தியுடனும் போட்டித்திறனுடனும் இருக்க வேண்டியது அவசியம் என்றும், அதற்காக புதிய திறன்கள் மற்றும் முன்னேற்றமான தொழில்நுட்பங்களை விரைவாக கற்றுக்கொள்வது முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“5G மற்றும் A.I. திறன்களை மேம்படுத்த தவறினால் நாம் பின்தங்கி விடுவோம். அதைவிட கவலைக்கிடம் என்னவெனில், எதிர்காலத்தில் நமது பிள்ளைகள் சிறந்த வேலைவாய்ப்புகளைப் பெற முடியாத நிலை ஏற்படும்,” என்று அன்வார் எச்சரித்தார்.

செல்கோம் டிஜி நிறுவனம் நடத்திய CD:NXT திட்டத்தின் தொடக்க விழாவில் கலந்து கொண்டு உரையாற்றியபோது பிரதமர் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here