மலேசியாவிற்குச் சொந்தமான 1MDB பணம் RM30 பில்லியன் மீட்கப்பட்டது!

கோலாலம்பூர்:

1MDB ஊழல் வழக்கில், முறைகேடாகப் பயன்படுத்தப்பட்ட RM42 பில்லியனில், சுமார் 70% அதாவது RM30 பில்லியன் ரிங்கிட் மீட்கப்பட்டுள்ளதாக, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) 1MDB சொத்து மீட்புப் பணிக்குழு தெரிவித்துள்ளது.

இது, உலகளாவிய ஊழல் வழக்குகளை ஒப்பிடும்போது, மிக உயர்ந்த மீட்பு விகிதம் என்றும் அது தெரிவித்தது.

மூத்த இயக்குநர் டத்தோ முகமட் ஸம்ரி சைனுல் அபிடின் (Datuk Mohamad Zamri Zainul Abidin) கூறுகையில், அமெரிக்கா, சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து போன்ற சர்வதேசப் பங்காளிகளுடன், மலேசிய நிறுவனங்கள் மேற்கொண்ட வலுவான ஒத்துழைப்பால் இந்தச் சாதனை சாத்தியமானது என்று தெரிவித்தார்.

உள்நாட்டுச் சொத்துக்களில் 90-95% ஏற்கெனவே மீட்கப்பட்டுள்ள நிலையில், ஜோ லோ (Jho Low), தாரிக் ஒபைத் (Tarek Obaid) பேட்ரிக் மஃகோனி (Patrick Mahony) போன்ற வெளிநாட்டு நபர்களுடன் தொடர்புடைய சொத்துக்களை மீட்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, பிரேசிலின் பெட்ரோபிராஸ் (Petrobras) ஊழல் வழக்கை விட, மலேசியாவின் மீட்பு நடவடிக்கை அதிக உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. அண்மையில், ஜே.பி.மோர்கன் சேஸ் (JPMorgan Chase) வங்கி, RM1.4 பில்லியன் செலுத்த ஒப்புக்கொண்டது.

இதற்கிடையில், நஜிப் ரசாக்கின் RM2.27 பில்லியன் சம்பந்தப்பட்ட 1MDB குற்றவியல் வழக்கு, அக்டோபரில் மீண்டும் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here