கோலாலம்பூர்:
அரசாங்க கொள்முதல் மசோதா 2025 (Government Procurement Bill 2025), மலேசியாவின் கொள்முதல் முறையை அனைத்துலகத் தரத்திற்கு இணையாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வெளிப்படைத்தன்மை, திறந்த போட்டி, சமச்சீரான அணுகுமுறை, மேலும் ஒருமைப்பாட்டை உறுதி செய்வதே இதன் முக்கிய நோக்கமாகும் என்று பக்கத்தான் ஹரப்பான் பக்ரி நாடாளுமன்ற உறுப்பினர், Tan Hong Pin தெரிவித்தார்.
இந்த மசோதாவின்படி, open tender வழிமுறை, முக்கிய கொள்முதல் முறையாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
அதுமட்டுமின்றி, ஒரு கொள்முதல் மேல்முறையீட்டு மன்றமும் (Procurement Appeal Tribunal) அமைக்கப்படும்.
மேலும், இந்த மசோதா, மோசடி, போலி ஆவணங்கள், அரசியல் தலையீடு போன்றவற்றைத் தடுக்க, கடுமையான அபராதங்களை விதிக்கிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், RM1 மில்லியன் அல்லது ஒப்பந்த மதிப்பில் மூன்று மடங்கு அபராதம், சிறைத் தண்டனை, தொடர்ச்சியான மீறல்களுக்கு தினசரி அபராதமும் விதிக்கப்படும்.
இந்த மசோதா, சிறு நடுத்தர நிறுவனங்களின் (SME) பங்கேற்பையும், உள்ளூர் பொருட்கள், பசுமை கொள்முதல் ஆகியவற்றை ஊக்குவிக்கிறது. இது, மடாணி அரசாங்கத்தின் (MADANI Government) ஒருமைப்பாட்டு கொள்கையை பிரதிபலிக்கிறது.
இதனிடையே, இந்த மசோதாவை நாடாளுமன்றச் சிறப்புக் குழு மூலம் மேலும் ஆய்வு செய்ய வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.



















