புத்ராஜெயா:
வட இந்தியாவில், குறிப்பாக ஜம்மு, லே, லடாக் ஆகிய பகுதிகளில், தொடர்ந்து பெய்து வரும் பருவமழை, நிலச்சரிவு காரணமாக, சிக்கித் தவித்த மலேசியர்களை மீட்க, மலேசிய வெளியுறவுத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த இயற்கை சீற்றத்தால், பலர் உயிரிழந்துள்ளனர்.
டெல்லியில் உள்ள மலேசிய தூதரகம், பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்டு, அவர்களை விரைவில் மீட்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.
இதனிடையே இந்தியாவிற்கு அவசியமற்ற பயணங்களை ஒத்திவைக்குமாறு மலேசியர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
தற்போது அங்கு இருக்கும் மலேசியர்கள், தங்கள் வருகையைப் பதிவு செய்து, உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேவைப்பட்டால், டெல்லியில் உள்ள மலேசிய தூதரகத்தை, +91-11-2415 9300 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும், ஊடக அறிக்கைகளின்படி, ஜம்மு, காஷ்மீரில் உள்ள வைஷ்ணோ தேவி கோயில் அருகே ஏற்பட்ட நிலச்சரிவில், குறைந்தது 33 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.



















