கோலாலம்பூர்:
மலேசியாவின் சாலைப் போக்குவரத்துத் இலாகா (JPJ), கடந்த ஜூன் 23 முதல் ஜூலை 31 வரை, 500 வணிக வாகன நிறுவனங்களில் மேற்கொண்ட ஆய்வில், 60%-க்கும் அதிகமான நிறுவனங்கள் பாதுகாப்புத் தரங்களை பூர்த்தி செய்யவில்லை எனத் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனங்கள், வாகனங்களில், ஜி.பி.எஸ் (GPS) கருவி சரியாகப் பொருத்தாததே முக்கியக் காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, JPJ-இன் தலைமை இயக்குநர் டத்தோ ஏடி ஃபாட்லி ராம்லி (Datuk Aedy Fadly Ramli) கூறுகையில், நாடு முழுவதும் நடத்தப்படவிருக்கும் ஆய்வின் முதற்கட்டமாக தான் சுமார் 300,000 வணிக வாகன நிறுவனங்களில் இந்த சோதனை நடவடிக்கை.
இதனிடையே, ஆய்வில் தோல்வியடைந்த நிறுவனங்கள், தங்களின் குறைபாடுகளைச் சரிசெய்ய, ஒரு மாத கால அவகாசம் வழங்கப்படும்.
இந்த அவகாசத்திற்குப் பிறகும், விதிகளைப் பின்பற்றத் தவறினால், அவர்களின் அனுமதி ரத்து செய்யப்படலாம்.
அதுமட்டுமின்றி மீண்டும் மீண்டும் தவறிழைக்கும் நிறுவனங்கள், நில பொதுப் போக்குவரத்து ஏஜென்சிக்கு (APAD) அனுப்பப்படுவார்கள்.
மேலும் போக்குவரத்து அமைச்சுடன் இணைந்து, ஆய்வு செயல்முறையை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் மேம்படுத்த JPJ பணியாற்றி வருகிறது.
அதுமட்டுமின்றி, வாகன நிகழ்வுகளை ஏற்பாடு செய்பவர்கள், சாலை விதிகளைப் பின்பற்றுவதோடு, விபத்துகளைத் தவிர்க்க, JPJ மற்றும் காவல்துறையிடமிருந்து ஒப்புதல் பெற வேண்டும் என்றும் அவர் நினைவூட்டினார்.




















