முஹிடின் மீது பிரதமர் வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக MCMC-யின் அறிக்கை இதுவரை கிடைக்கவில்லை: ஃபாஹ்மி

கோலாலம்பூர்:

முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசினுக்கு எதிராக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முன்வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பில், மலேசிய தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா ஆணையத்தின் (MCMC) அறிக்கை இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை என்று தகவல் தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், வழக்கின் தன்மை மற்றும் விசாரணைச் செயல்முறை காரணமாக அறிக்கைத் தயாரிக்க கூடுதல் நேரம் எடுக்கப்படலாம்.

“எம்சிஎம்சி தன்னிச்சையாக விசாரணையை நடத்தி வருகிறது. அறிக்கை வந்தவுடன் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்,” என்று ஃபாஹ்மி குறிப்பிட்டார்.

இந்நிலையில், அதிகாரப்பூர்வ விசாரணை நடைபெறிக் கொண்டிருக்கும் நிலையில் யாரும் முன்னதாக ஊகக் கருத்துகளை வெளியிட வேண்டாம் என்றும், சட்ட நடைமுறைக்கு அனைவரும் மரியாதை செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here