தேசிய தினக் கொண்டாட்டம்- புத்ராஜெயாவில் நாளை வானிலை தெளிவாக இருக்கும்

கோலாலம்பூர்:

புத்ராஜெயாவில் நாளை காலை வானிலை தெளிவாக இருக்கும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அத்துறை தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிட்ட தகவலில், புத்ராஜெயாவில் காலை, மாலை மற்றும் இரவு நேரங்களிலும் மழையின்றி வானிலை அமைதியாகவும் உகந்ததாகவும் இருக்கும் என தெரிவித்துள்ளது.

புத்ராஜெயா, இவ்வாண்டும் தேசிய தினக் கொண்டாட்டங்களை நடத்தும் பெருமையை ஏற்றுள்ளது. இந்நிகழ்வில் 5 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், பெர்லிஸ், கெடா, பினாங்கு, பேராக், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜோகூர், சபா மற்றும் லாபுவான் கூட்டாட்சி பிரதேசம் ஆகிய ஒன்பது மாநிலங்களில் நாளை காலை மழை பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளது.

பகாங், திரெங்கானு, கிளந்தான், சரவாக் மற்றும் கோலாலம்பூர் ஆகிய இடங்களில் நாளை காலை வானிலை தெளிவாகவும் சீராகவும் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here