கிள்ளான் துறைமுகத்தில் இருந்து சிங்கப்பூருக்குச் கடத்தப்படவிருந்த 300,000 மின்சிகரெட்டுகள் கண்டெடுப்பு

கோலாலம்பூர் –

சீனாவில் இருந்து வந்த 40 அடி உயரம் கொண்ட நீல நிறக் கொள்கலன், முதலில் சுங்கத்த்துறை அதிகாரிகளுக்கு சந்தேகத்தை கிளப்பவில்லை.

ஆனால், ஜூலை 30 அன்று கொள்கலனைத் திறந்தபோது, அதிகாரிகள் அதில் மின் சிகரெட்டுகள் மறைக்கப்பட்டிருந்ததற்கான சான்றுகளை கண்டறிந்தனர்.

மரச்சாமான்கள் என அறிவிக்கப்பட்டிருந்த பல பெட்டிகள் பச்சை நிற பாலிதீன் பைகளில் சீலிடப்பட்டிருந்தன — இது, மின்சிகரெட் கடத்தல் கும்பல்கள் பொதுவாக பயன்படுத்தும் முறையாகும்.

பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்லாந்திலும் இதே மாதிரியான பைகள் முன்பு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மொத்தமாக, கிள்ளான் துறைமுக சுங்க அதிகாரிகள் சுமார் 3 லட்சம் மின்சிகரெட்டுகள் மற்றும் தொடர்புடைய பொருட்களை கைப்பற்றினர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் RM500,000 (S$152,000) என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சரக்கு சிங்கப்பூருக்குச் செல்லும் வழியில் இருந்தது எனவும் கூறப்படுகிறது.

“இவை சிங்கப்பூர் வாடிக்கையாளர்களிடையே பிரபலமான பிராண்டுகள். மலேசியாவிலிருந்து, மின்சிகரெட்டுகள் பொதுவாக சாலை வழியாக சிங்கப்பூருக்கு கடத்தப்படுகின்றன,” என்று பெயர் வெளியிட விரும்பாத புலனாய்வாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here