கோலாலம்பூர்:
2020-ஆம் ஆண்டு முதல், இந்த ஆண்டு ஜூலை மாதம் வரை, அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட 60 குற்றவியல் வழக்குகளில், 41 வழக்குகள், `மேல் நடவடிக்கை இல்லை’ (no further action – NFA) என வகைப்படுத்தப்பட்டுள்ளதாக, பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் சைட் (Datuk Seri Azalina Othman Said), நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இருப்பினும், புதிய ஆதாரங்கள் கிடைத்தால், இந்த வழக்குகள் மீண்டும் திறக்கப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
விசாரிக்கப்பட்டவர்களின் பின்னணியை, அட்டர்னி ஜெனரல் அலுவலகம் (Attorney-General’s Chambers) கருத்தில் கொள்ளாது என்றும், உண்மைகள், ஆதாரங்கள், சட்டத்தின் அடிப்படையிலேயே முடிவுகளை எடுக்கும் என்றும், அஸாலினா வலியுறுத்தினார்.
மேலும், இந்த முடிவுகள், நேர்மை, சுதந்திரத்தின் அடிப்படையில் எடுக்கப்படுகின்றன என்றும் அவர் கூறினார். இந்தக் குற்றவியல் வழக்குகளின் சதவீதம், அரசியல் தலையீட்டிலிருந்து பாதுகாப்பது குறித்து, செனட்டர் ஹுசைன் இஸ்மாயில் (Hussin Ismail) எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்தபோது, அஸாலினா இவ்வாறு தெரிவித்தார்





















