கோத்தா பாரு:
மாணவர் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், கல்வி அமைச்சு நாடு முழுவதும் உள்ள விடுதி வசதிகள் கொண்ட 200 பள்ளிகளில் விரைவில் CCTV கேமராக்கள் பொருத்தவுள்ளது. இதற்காக 3 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என கல்வித் தலைமை இயக்குநர் முஹம்மட் அசாம் அஹமட் கூறினார்.
தேவையும், மாணவர் எண்ணிக்கையும் அடிப்படையாகக் கொண்டு முன்னுரிமை வழங்கப்படும். அதிக மாணவர்கள் உள்ள பெரிய விடுதிகள் முதலில் தேர்வு செய்யப்படும், என்றார் அவர்.
கழிப்பறை போன்ற மாணவர்களின் தனியுரிமை பாதிக்கப்படக்கூடிய இடங்களில் கேமரா பொருத்தம் செய்ய முடியாது. சம்பந்தப்பட்ட சட்டங்களை மதித்து, நிபுணர் ஆலோசனையின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும், எனவும் அவர் கூறினார்.
மேலும், பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக கூடுதல் விடுதி வார்டன்களை நியமிக்கும் திட்டமும் பரிசீலனையில் இருப்பதாகவும் முஹம்மட் அசாம் குறிப்பிட்டுள்ளார்.





















