கிம் ஜோங் உன்-னுடன் எதிர்பாராத சந்திப்பு; முகநூலில் வைரலான பிரதமர் அன்வார் இப்ராகிம்

பீஜிங்:

மலேசிய பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம், சீனாவில் நடைபெற்ற நிகழ்வின் போது வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்-னை எதிர்பாராத விதமாக சந்தித்ததாக தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார். இந்த பதிவு சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

இருவரும் செப்டம்பர் 3ஆம் தேதி (புதன்கிழமை) சீனாவின் வெற்றி தின அணிவகுப்பில் பங்கேற்க டியானான்மென் சதுக்கத்தில் இருந்தபோது சந்திப்பு நிகழ்ந்தது.

“எதிர்பாராதவிதமாக வடகொரிய அதிபர் கிம் ஜோங் உனைச் சந்தித்தேன். அவர் கூட டியானான்மென் சதுக்க அணிவகுப்பைப் பார்ப்பதற்காக வந்திருந்தார். அவரைச் சந்தித்து வணக்கம் கூறும் வாய்ப்பு கிடைத்தது,” என அன்வார் தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அதனுடன், இருவரும் கைகுலுக்கிக் கொண்ட புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.

பிரதமரின் இந்தப் பதிவுக்கு ஃபேஸ்புக் பயனாளர்களின் பெரும்பாலோர் நேர்மறையான கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

ஜப்பான் இரண்டாம் உலகப் போரில் சரணடைந்ததின் 80ஆம் ஆண்டு நிறைவையொட்டி டியானான்மென் சதுக்கத்தில் நடைபெற்ற அணிவகுப்பில் 26 வெளிநாட்டு தலைவர்கள் கலந்து கொண்டனர். அதில் திரு அன்வார் மற்றும் திரு கிம் ஆகியோரும் அடங்கினர்.

குறிப்பாக, 2021ஆம் ஆண்டு திரு கிம்மின் ஒரே தந்தை வேறு தாயின் சகோதரர் கிம் ஜோங் நம், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து மலேசியா–வடகொரியா இராஜதந்திர உறவுகள் துண்டிக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, இரு நாடுகளின் தலைவர்கள் சந்தித்தது இதுவே முதன்முறை என குறிப்பிடப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here