நம்முடைய வாழ்க்கையில் எந்தவித கஷ்டமும் இல்லாமல் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் வாழ வேண்டும் என்று நாம் அனைவருமே ஆசைப்படுவோம். அப்படிப்பட்ட நிலையை தான் நாம் சுபிட்சம் என்கிறோம். இந்த சுபிட்சத்தை தரக்கூடிய தெய்வமாக திகழக்கூடியவள் தான் மகாலட்சுமி தாயார். மகாலட்சுமி தாயாரிடம் நாம் எதை முழு மனதோடு கேட்டாலும் அது நமக்கு கிடைக்கும் என்றே கூறலாம். அப்படி நாம் கேட்பவை நமக்கு கிடைக்கவும் நம் வாழ்க்கையில் சுபிட்சம் ஏற்படவும் செய்ய வேண்டிய ஒரு மகாலட்சுமி வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
வீட்டில் சுபிட்சம் நிலவ வழிபாடு படிக்கின்ற குழந்தைகளுக்கு படிப்பு வேண்டுமா? வீரம் வேண்டுமா? நல்ல நினைவாற்றல் வேண்டுமா? நாம் செய்யக்கூடிய விவசாயம் சிறந்து விளங்க வேண்டுமா? சாப்பிடும் சாப்பாட்டிற்கு எந்த பஞ்சமும் இல்லாமல் இருக்க வேண்டுமா? பணவரவு அதிகரிக்க வேண்டுமா? எந்த ஒரு செயலை செய்வதாக இருந்தாலும் அதற்குரிய தைரியம் வேண்டுமா? இப்படி நம் வாழ்க்கைக்கு எதுவெல்லாம் தேவையோ அது அனைத்தையும் தரக்கூடிய தெய்வங்களும் ஒருவராக திகழ்பவர் தான் மகாலட்சுமி. அஷ்டலட்சுமிகளின் ஸ்ரூபமாக இருக்கக்கூடிய மகாலட்சுமி தாயாரை நாம் முழுமனதோடு வழிபாடு செய்யும்பொழுது அனைத்து விதமான நன்மைகளும் நம்மை தேடி வரும்.
இந்த எளிமையான தீப வழிபாட்டை ஒவ்வொரு வாரமும் வரக்கூடிய வெள்ளிக்கிழமை அன்று மாலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள் செய்ய வேண்டும். இந்த வழிபாட்டிற்கு வாசனை மிகுந்த வெள்ளை நிற பூக்கள் அல்லது தாமரைப்பூ வேண்டும். சாதாரணமாக ஏற்றக்கூடிய தீபத்திற்கு பயன்படுத்தும் அகல் விளக்கை விட சற்று பெரியதாக இருக்கக்கூடிய மண்ணால் செய்யப்பட்ட கிண்ணம் போன்ற அமைப்பில் இருக்கும் ஒன்றையும் வாங்கிக் கொள்ளுங்கள்.
அதை சுத்தம் செய்து அதற்கு வெளிப்புறத்தில் மஞ்சளை தடவி 8 எண்ணிக்கையில் குங்குமத்தை வைத்துக் கொள்ளுங்கள். வெள்ளிக்கிழமை மாலை 6:00 மணிக்கு மகாலட்சுமி தாயாரின் படத்திற்கு முன்பாக ஒரு தாம்பாள தட்டை வைத்து அதில் வாசனை மிகுந்த வெள்ளை நிற மலர்களை பரப்பிக் கொள்ளுங்கள். அதற்கு நடுவே நம் மஞ்சள் பூசி பொட்டு வைத்த மண் கிண்ணம் இருக்கும் அல்லவா? அதை வைத்து அது முழுவதும் கல் உப்பை கொட்டி சரிசமமாக பரப்பி வைத்துக் கொள்ள வேண்டும்.
அதற்கு மேல் ஒரு அகல் விளக்கை வைத்து சுத்தமான பசு நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சுத்திரி அல்லது தாமரைக்தண்டு திரி போட்டு வடக்கு பார்த்தவாறு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை ஏற்றி முடித்த பிறகு மகாலட்சுமி தாயாருக்கு ஏதாவது ஒரு பொருளை நெய்வேத்தியமாக வைத்துக் கொள்ளுங்கள்.
இப்பொழுது இந்த தீபத்திற்கு முன்பாக அமர்ந்து இந்த தீபத்தை பார்த்தவாறு நம்முடைய நீண்ட நாள் கோரிக்கை எதுவோ அதை நேர்மறையான வார்த்தையை பயன்படுத்தி கூற வேண்டும். அது நடந்து முடிந்தது போல் பாவித்துக்கொண்டு மகாலட்சுமி தாயாருக்கு நன்றி கூற வேண்டும். இப்படி தொடர்ச்சியாக ஏழு வாரங்கள் ஒரே வேண்டுதலை முன்வைத்து நாம் வழிபாடு செய்யும்பொழுது மகாலட்சுமியின் அருளால் நாம் நினைத்தது நடப்பதோடு நம் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து நன்மைகளும் நடைபெறும்.




















