கோலாலம்பூர்:
முகநூலில் (Facebook) விளம்பரப்படுத்தப்பட்ட, போலி முதலீட்டுத் திட்டத்தில், 55 வயதுடைய வர்த்தகர் ஒருவர், RM571,000 ரிங்கிட்டிற்கும் அதிகமான பணத்தை இழந்துள்ளார்.
அதிக லாபம் கிடைக்கும் என்ற வாக்குறுதியால் ஈர்க்கப்பட்ட அந்தப் பெண் வர்த்தகர், ஜூலை 10 முதல் 31 ஆம் தேதி வரை, மூன்று வங்கிக் கணக்குகளில் பணத்தை செலுத்தியுள்ளார்.
மேலும், அந்தப் பெண் பயன்படுத்தியச் போலி முதலீட்டு செயலி (app), RM804,000 இலாபம் காட்டுவது போல, போலியாகக் காண்பித்துள்ளது.
இருப்பினும், பின்னர், அவரது கணக்கு முடக்கப்பட்டு, அவருக்கு எந்த லாபமும் கிடைக்கவில்லை.
இந்த வழக்கு, குற்றவியல் சட்டம் பிரிவு 420-இன் கீழ், காவல்துறையால் விசாரிக்கப்படுகிறது.
இதுபோன்ற மோசடிகள் குறித்து, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், இணையக் குற்றத் தடுப்புப் பிரிவு (Cyber Crime Alert) வலைத்தளத்தில், தகவல்களைச் சரிபார்க்க வேண்டும் என்றும், தேசிய மோசடி எதிர்ப்பு மையத்தைத் (National Scam Response Centre) தொடர்பு கொண்டு, மேலதிக இழப்புகளைத் தவிர்க்க வேண்டும் என்றும், அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.





















