இந்தோனேசியாவில் பரபரப்பு: 65 பாகங்களாக வெட்டப்பட்ட மனித உடல் கண்டுபிடிப்பு!

கோலாலம்பூர்:

இந்தோனேசியா, கிழக்கு ஜாவா, மொஜோகெர்டோ (Mojokerto) பகுதி மக்கள், கடந்த சனிக்கிழமை, காட்டுப்பகுதி ஒன்றில், 65 பாகங்களாக வெட்டப்பட்ட, மனித உடலின் துண்டுகளைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உயிரிழந்தவர், 25 வயதுடைய Tas என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர், லாமோங்கன் (Lamongan) என்ற இடத்தைச் சேர்ந்தவர் என்றும், மதுராவில் உள்ள, ட்ருனோஜோயோ (Trunojoyo) பல்கலைக்கழகத்தில், படிப்பை முடித்த பிறகு, சுரபாயாவில் (Surabaya) வசித்து வந்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது

காவல்துறையின் கூற்றின்படி கண்டுபிடிக்கப்பட்ட 65 துண்டுகளில், 63 தசைகள், கொழுப்புகள், தலையின் தோல், முடி ஆகியவை அடங்கும். மற்றைய இரண்டு பாகங்களும், இடது கால், வலது மணிக்கட்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பாதிக்கப்பட்டவர், தனது காதலனுடன், வசித்து வந்ததும் தெரிய வந்துள்ளது.

எனவேதான் தற்போது பாதிக்கப்பட்டவரின் காதலன் மீது விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

இதற்கிடையில், குற்றவாளி, விரைவில் கைது செய்யப்படுவார் என, குடும்பத்தினர் நம்பிக்கை தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here