கோலாலம்பூர்,
பாலியில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பலர் உயிரிழந்ததற்காக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.
“பாலியில் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுடன் என் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன. வீடுகள் மற்றும் வாழ்வாதாரங்களில் பாதிப்பு ஏற்பட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த ஆதரவு” என்று அன்வார் தனது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும், இந்த கஷ்டமான நேரத்தில், இந்தோனேசிய அதிபர் பிராபோவோ சுபியான்டோ மற்றும் இந்தோனேசிய மக்களுடன் மலேசியா ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துகிறது என்றும், “பாலியில் உள்ள மக்கள் இந்த பேரழிவைத் தாண்டி மீட்கும் வரை அவர்களை நாங்கள் எப்போதும் நினைவில் வைத்திருப்போம்” எனவும் பட்டுவிட்டுள்ளார்.
பாலியில் புதன்கிழமை நடைபெற்ற கனமழை, ஜெம்ப்ரானா, ஜியான்யார், பாதுங்க், தபானன், காரங்காசெம், க்ளுங்க்குங் மற்றும் டென்பசார் பகுதிகளில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசிய தேசிய பேரிடர் முகாமைத்துவ முகமை (BNPB) வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இதுவரை 14 பேர் உயிரிழந்தனர், 2 பேர் காணாமல் உள்ளனர், மேலும் 659 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.





















