பேராக்: `கே.எல்.கே டெக்பார்க்’ – RM3.5 பில்லியன் வளர்ச்சி மற்றும் 20,000 வேலைவாய்ப்புகளை உருவாக்க உள்ளது!

கோலாலம்பூர்:

கோலாலம்பூர் கெப்போங் (Kuala Lumpur Kepong – KLK) பெர்ஹாட், தாஞ்சோங் மாலிமில் (Tanjong Malim), `கே.எல்.கே டெக்பார்க்’ (KLK TechPark) திட்டத்தை, இன்று, தொடங்கி வைத்தது.

இந்தத் திட்டம், அடுத்த பத்தாண்டுகளில், RM3.5 பில்லியன் மொத்த வளர்ச்சி மதிப்பை, உருவாக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

526.9 ஹெக்டேர் பரப்பளவு, தொழில்துறை வளர்ச்சிக்கும், 80.9 ஹெக்டேர் பரப்பளவு, குடியிருப்புப் பகுதிகளுக்கும், ஒதுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம், 2025 முதல் 2035 வரை, பல்வேறு கட்டங்களில், மேம்படுத்தப்படும்.

இதனிடையே, இதன் தலைமை நிர்வாகத் அதிகாரி டான் ஸ்ரீ லீ ஓய் ஹியான் (Tan Sri Lee Oi Hian) கூறுகையில், முதல் கட்டத்தில், 150 ஏக்கர் பரப்பளவு கொண்ட, பி.ஒய்.டி. கோ லிமிடெட் (BYD Co Ltd’s) வசதிகள், இருக்கும் என்று தெரிவித்தார்.

இந்த `டெக்பார்க்’, பேராக் மாநிலத்தை, ஒரு உயர் தொழில்நுட்பத் தொழில்களின் மையமாக, நிலைநிறுத்துவதை, நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும், இது, 10,000 முதல் 20,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை, மோட்டார் வாகன உயர் தொழில்நுட்ப பகுதி (Automotive High-Tech Valley – AHTV) அருகாமையில், இருக்கும் இந்தத் திட்டத்திற்கு, இந்த உள்கட்டமைப்புகள், வலுவான ஆதரவை வழங்கும்.

அதுமட்டுமின்றி, பேராக் மந்திரி பெசார், டத்தோஸ்ரீ சாரானி முகமட் (Datuk Seri Saarani Mohamad) அவர்களால், தொடங்கி வைக்கப்பட்ட இந்தத் திட்டம், பேராக் மாநிலத்தில், “உலகத் தரம் வாய்ந்த, நிலையான, வாகனத் துறை மையத்தின்” தொடக்கத்தைக் குறிக்கிறது.

கே.எல்.கே டெக்பார்க்’, ஏ.எச்.டி.வி.’யின் வளர்ச்சியைப் பூர்த்தி செய்யும். புரோட்டோன், கீலி (Geely), இப்போது, பி.ஒய்.டி. (BYD) ஆகிய நிறுவனங்களுக்குத் தேவையான, சுற்றுச்சூழல் அமைப்பை வழங்கும்.

இது, தாஞ்சோங் மாலிமை, இப்பகுதியின், மிகப்பெரிய வாகனத் தொகுதியாக, மாற்றும். உலகிலேயே முன்னணி மின்சார வாகன உற்பத்தியாளர்களில் (EV manufacturers) ஒன்றான, பி.ஒய்.டி-இன் வருகை, பேராக் மட்டுமல்லாமல் மலேசியாவின், மின்சார வாகனத் துறையின் எதிர்காலத்தில், அனைத்துலக நம்பிக்கையை, வெளிப்படுத்துகிறது.

இந்தத் திட்டம், மத்திய, மாநில அரசாங்கங்கள், தனியார் துறையின், வலுவான ஒத்துழைப்புடன், 2050-ஆம் ஆண்டுக்குள், நாட்டின், நிகர பூஜ்ஜிய கார்பன் வெளியேற்ற இலக்கை, அடைய, துணைபுரிகிறது என்றும், சாரானி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here