சபாவில் வெள்ளம்: 400 பேர் குடியிருப்புகளை விட்டு வெளியேற்றம்

கோத்த கினபாலு,

சபாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை 9 மணி நிலவரப்படி 125 குடும்பங்களைச் சேர்ந்த 400 பேராக அதிகரித்துள்ளது. நேற்று 126 குடும்பங்களைச் சேர்ந்த 391 பேர் இருந்த நிலையில், இன்று அந்த எண்ணிக்கை மேலும் உயர்ந்தது.

சபா பேரிடர் மேலாண்மை குழு (JPBN) வெளியிட்ட அறிக்கையில், பெனாம்பாங்கில் வெள்ள நிவாரண மையங்களில் (PPS) தஞ்சமடைந்தோர் 247 பேர் (74 குடும்பங்கள்) எனக் குறைந்துள்ளதாகவும், பியூபோர்டில் 153 பேர் (51 குடும்பங்கள்) என அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

பெனாம்பாங்கில் பாதிக்கப்பட்டவர்கள் பெனாம்பாங்க் விளையாட்டு வளாகம் (36 பேர் / 6 குடும்பங்கள்), தேவான் ஹுகுவான் சியாவ் (147 பேர் / 49 குடும்பங்கள்) மற்றும் செக்கோலா கெபாங்க்சான் செயிண்ட் பால் கொலோபிஸ் (64 பேர் / 19 குடும்பங்கள்) ஆகிய மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பியூபோர்டில் உள்ள அனைத்து பாதிக்கப்பட்டோரும் செலாகோன் நிரந்தர நிவாரண மையத்தில் (PPK) தங்க வைக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 22 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன; அதில் 14 கிராமங்கள் பெனாம்பாங்கில், எட்டு கிராமங்கள் பியூபோர்டில் உள்ளன.

இதே நேரத்தில், ஜாலான் டொங்கொங்கோன்–பாபர் ஸ்பர்ஸ் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதால், பாபர்-கோட்டா கினாபாலு வழித்தடம் முற்றிலும் மூடப்பட்டுள்ளது. பொதுமக்கள் மாற்று வழித்தடமாக ஜாலான் பாபர்-கினாருட்-லோக் ஹை வே ஐ பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கோத்த கினபாலுவில் நேற்று இரவு முதல் தொடர்ந்து பெய்த கனமழையால் செம்புலான், லிடோ, கொலொம்போங், லிகாஸ் மற்றும் மங்காட்டல் பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டதாக JPBN தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here