கோலாலம்பூர்:
ஜூலை 29 முதல், ஆகஸ்ட் 7 வரை, ஸ்தாபாக், சுங்கை பெஞ்சாலா, டாமான்சரா ஆகிய பகுதிகளில், நடத்தப்பட்ட, `ஓப் பெர்பில்’ (Op Purple) என்ற, இரண்டு அதிரடி நடவடிக்கைகளில், RM8.45 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புடைய 32 இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள், அரச மலேசிய சுங்கத் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த வாகனங்கள், சுங்க வரி செலுத்தப்படாமல், 48 மாதங்களுக்கும் மேலாக, ஒரு உரிமம் பெற்ற, கிடங்கில், வைக்கப்பட்டிருந்ததால், வரி செலுத்தப்படாததாக, நம்பப்படுகிறது.
இந்த வாகனங்களுக்கான, இறக்குமதி வரி, மேலும் வரிகளின் மதிப்பு, RM5.38 மில்லியன் என, மதிப்பிடப்பட்டுள்ளது என்று, கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேச சுங்கத் இலாகாவின் இயக்குநர், வான் நோரிஸான் வான் தாவூட் கூறினார்.
இதனிடையே, கிடங்கின் உரிமையாளர், 1967-ஆம் ஆண்டு சுங்கச் சட்டம் பிரிவு 4-இன் கீழ், வரி விலக்கைத், தவறாகப் பயன்படுத்தியுள்ளார் என்று, ஆரம்பக்கட்ட விசாரணையில், தெரியவந்துள்ளது.
இது மட்டுமின்றி, ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை, கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேச சுங்கத் இலாகா, சிகரெட்டுகள், மதுபானங்கள், போதைப்பொருட்கள், இறக்குமதி செய்யப்பட்ட இரும்புகள், ஆளில்லா விமானங்கள் (drones), இதர பொருட்கள் உட்பட, RM72.12 மில்லியன் மதிப்புள்ள, 353 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.
எனவே தான், கடத்தல் முயற்சிகளைத் தடுக்க, பொதுமக்களுக்கு, ஏதேனும், தகவல் தெரிந்தால், 1-800-88-8855 என்ற, சுங்கத் இலாகாவின் இலவசத் தொலைபேசி என்னை தொடர்பு கொள்ளுமாறு சுங்கத் இலாகா கேட்டுக்கொண்டுள்ளது.




















