பள்ளி விடுதியில் திருட்டுப் பட்டம்; மாணவி உயிரிழப்புக்கு காரணமா?

கோலாலம்பூர்:

பாபார், எஸ்.எம்.கே.ஏ. துன் டத்து முஸ்தபா பள்ளி விடுதியில், `ஸாரா கைரினா மகாதீர்’,
என்ற 13 வயதுப் பள்ளி மாணவி, மீது திருட்டு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதால், பாதிக்கப்பட்ட மாணவி, மன உளைச்சலில், இருந்ததாக, நேற்று மரண விசாரணை நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக, தங்கும் விடுதியின், தலைமை வார்டன் அஸாஹரி அப்துல் சாகப் நீதிமன்றத்தில், சாட்சியம் அளித்தார்.

மாணவர்களின் வாக்குமூலங்களின் அடிப்படையில், முதலாம் படிவ மாணவர் ஒருவர் அறை தலைவரிடம் தனது உடமைகள் காணாமல் போய்விட்டதாக புகார் அளித்துள்ளார், அதில் தனது பணப்பை, பணம், வங்கி அடையாள அட்டை, ஆகியவை அடங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அறைத்தலைவர் ஸாரா கைரினாவைக் அழைத்து விசாரித்துள்ளார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் ஸாரா தான் காணாமல் போனதாக கூறப்படும் பொருட்களை எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஒரு சில மாணவர்கள் அறை தலைவர் சாராவை விசாரித்துக் கொண்டிருக்கும் வேளையில் அவரது உடமைகள், இருக்கும் லோக்கரை திறந்து பொருட்களை தேடி உள்ளனர்.

அப்போது, அறை தலைவருக்கு சொந்தமான மலேசியக் கொடி (பின்’) ஸாரா’-வின், உடைமைகளில், கண்டெடுக்கப்பட்டதாகக், அந்த மாணவர்கள் அறை தலைவரிடம் தெரிவித்துள்ளனர் .

இதனைத் தொடர்ந்து, தான், நிரபராதி என்று, ஸாரா’ கூறியபோதும், அவரது, அறைத் தலைவர், ஸாராவை கடுமையாக, பேசியுள்ளார்.

இதனால், ஸாரா’, “நான் திருடவில்லை” என்று, கத்திக்கொண்டே, கண்ணீருடன், கழிப்பறைக்கு, ஓடினார்.

இதையடுத்து, ஜூலை 16ஆம் தேதி அன்று, அதிகாலையில், அவர், விடுதியின், தரைத் தளத்தில், சுயநினைவின்றி, கண்டெடுக்கப்பட்டார்.

பின்னர், அடுத்த நாள், குவின் எலிசபெத் மருத்துவமனையில் (Queen Elizabeth Hospital), அவர், உயிரிழந்தார்.

இந்த மரண விசாரணையின், எட்டாவது சாட்சியான, தலைமை வார்டன் அஸாஹரி, இந்த திருட்டு குற்றச்சாட்டு தொடர்பாக காவல்துறைக்கு, ஐந்து மாணவர்களின் வாக்குமூலங்களை, வழங்கியதாக, நீதிமன்றத்தில், தெரிவித்தார்.

இதனிடையே பணப்பை, பணம், வங்கி அடையாள அட்டை ஆகியவை, காணாமல் போனதாக கூறப்பட்ட நிலையில்,
பணப்பை மட்டுமே, , கண்டுபிடிக்கப்பட்டது என்றும், அதில், பணம் அல்லது, அடையாள அட்டை இல்லை என்றும், அவர், உறுதிப்படுத்தினார்.

ஸாரா’-வை, நேரடியாக, எதிர்கொள்வதற்குப் பதிலாக, மாணவர்கள், அதை, வார்டனிடம் தெரிவித்திருக்க வேண்டும் என்றும், அதிகாரப்பூர்வமாக, எந்தப் புகாரும், செய்யப்படவில்லை என்றும், அவர், ஒப்புக்கொண்டார்.

அதுமட்டுமின்றி, இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக ஸாரா கூறியது உண்மையா? பொய்யா என்று தலைமை வார்ட்னிடம் கேட்கப்பட்டபோது, அதற்கு பதில் அளித்த வர்டன் மாணவர்களின் சாட்சியங்களின் அடிப்படையில் ஸாரா கூறுவது உண்மையாகத்தான் இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

இதனிடையே ஸாராவின் இந்த மரணத்திற்கான, சூழ்நிலைகளைக் கண்டறிய, விசாரணை, தொடர்ந்து, நடைபெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here