தும்பாட்டில் மூன்று வாகனங்கள் மோதிய விபத்து: இரண்டு இளைஞர்கள் பலி

தும்பாட்:

தும்பாட் வகாஃப் கிங்கில் உள்ள பெட்ரான் பெட்ரோல் நிலையம் அருகே நடைபெற்ற விபத்தில் இரண்டு பதின்மவயது இளைஞர்கள் உயிரிழந்தனர்.

இரவு சுமார் 10.10 மணியளவில், 15 வயது இளைஞன் தும்பாட்டிலிருந்து கோத்தா பாரு நோக்கி யமஹா ஈகோ எஸ்ஐ மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது விபத்து ஏற்பட்டது என்று, தும்பாட் காவல்துறைத் தலைவர் ஏசிபி முகமட் கைரி ஷாஃபி தெரிவித்தார்.

அவர் ஓட்டிய மோட்டார் சைக்கிள், பெட்ரோல் நிலையத்திற்குள் நுழைய வலதுபுறம் திரும்பிய மற்றொரு மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் மோதியது. பின்னர் கட்டுப்பாட்டை இழந்த அது எதிர் பாதையில் சறுக்கி, ஒரு புரோட்டான் எக்ஸோரா கார் மீது மோதியது.

மோட்டார் சைக்கிளை ஓட்டிய இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னால் பயணித்த நண்பர் தும்பாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது உயிரிழந்தார்.

இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய இரண்டாவது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்தை விட்டு வெளியேறிவிட்டதாகவும், அவரைக் கண்டுபிடித்து விசாரணைக்கு அழைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here