காணாமல் போன 17 வயது நூர் அலினா; பொதுமக்களின் உதவியை நாடும் காஜாங் காவல்துறை

காஜாங்:

கடந்த சனிக்கிழமை மாலை முதல் காணாமல் போனதாகக் கூறப்படும் 17 வயது சிறுமி நூர் அலினா அப்துல்லாவை கண்டுபிடிக்க காஜாங் காவல்துறை பொதுமக்களின் ஒத்துழைப்பை நாடுகிறது.

நூர் அலினா, ஸ்ரீ கெம்பங்கான், தாமான் ஹார்மோனி இண்டாவில் உள்ள ஜாலான் ஹார்மோனி இண்டா 1 பகுதியில், சனிக்கிழமை மாலை சுமார் 4.15 மணியளவில் கடைசியாகக் காணப்பட்டார் என்று , காஜாங் காவல்துறைத் தலைவர் ஏசிபி நாஸ்ரோன் அப்துல் யூசோஃப் தெரிவித்தார்.

அவர் காணாமல் போனது குறித்து ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.40 மணிக்கு காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது.

காணாமல் போன இளம்பெண் மெலிந்த உடல் அமைப்பைக் கொண்டவர் என்றும் தோராயமாக 160 சென்டிமீட்டர் உயரம் கொண்டவர் என்றும் அவர் கூறினார்.

“அவர் கடைசியாக கருப்பு முக்காடு, கருப்பு கார்டிகன், சிவப்பு டி-சர்ட் மற்றும் கருப்பு பேன்ட் அணிந்திருந்தார்” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

நூர் அலினாவின் இருப்பிடம் குறித்த தகவல் தெரிந்தவர்கள் அருகிலுள்ள காவல் நிலையம் அல்லது காஜாங் மாவட்ட காவல் தலைமையகத்தை 03-89114222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.அல்லது விசாரணை அதிகாரியான சார்ஜென்ட் மஸ்துரா மேட்டை 01126259679 என்ற எண்ணில் நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here