செப்டம்பர் 30 முதல் RON95 பெட்ரோல் லிட்டருக்கு RM1.99 – பிரதமர் அன்வார் அறிவிப்பு

புத்ராஜெயா,

RON95 பெட்ரோலின் விலை செப்டம்பர் 30 முதல் லிட்டருக்கு RM2.05 இலிருந்து RM1.99 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இது பூடி மடானி (BUDI MADANI RON95) திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சலுகையின் மூலம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இந்த நற்செய்தியை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று, பிரதமர் துறை பணியாளர்களுடன் நடந்த மாதாந்திரக் கூட்டத்தில் அறிவித்தார்.

பிரதமரும், நிதி அமைச்சருமான அன்வார், செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் கொண்ட அனைத்து மலேசிய குடிமக்களும் RON95 எரிபொருள் சலுகைக்கு தகுதியானவர்கள் எனக் கூறினார்.

சாலைப் போக்குவரத்து துறை (JPJ) மற்றும் தேசிய பதிவு துறை (JPN) தரவுகளின் அடிப்படையில், 1 கோடியே 60 லட்சம் பேருக்கு மேற்பட்டோர் இந்த சலுகையைப் பெற தகுதியானவர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கோலாலம்பூர்: மலேசியர்கள், `ரோன்95’ (RON95) பெட்ரோலை, ஒரு லிட்டர், RM1.99 காசு என்ற, புதிய, குறைந்த விலையில் இனி வாங்கலாம்.

இந்த விலை, செப்டம்பர் 30-ஆம் தேதி முதல், அமலுக்கு வரும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் (Datuk Seri Anwar Ibrahim), அறிவித்தார்.

இதற்கு முன்னர், லிட்டருக்கு RM2.05 ஆக, இருந்த, பெட்ரோலின் விலை, இப்போது, குறைக்கப்பட்டுள்ளது.

இது, மலேசிய மக்களுக்கு, ஒரு சிறப்புப், பாராட்டு என்று, பிரதமர், கூறினார்.

இதனிடையே புடி95’ (*BUDI95) திட்டத்தின், ஒரு பகுதியாக, இந்த மானியம், செயலில் உள்ள, ஓட்டுநர் உரிமம் (active driver’s license*) வைத்திருக்கும் அனைத்துக் குடிமக்களுக்கும், தானாகவே, கிடைக்கும்.

அதுமட்டுமின்றி, இந்த விலையில் பெட்ரோலை வாங்குவதற்கு மாதாந்திர வரம்பு, 300 லிட்டராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இ-ஹெய்லிங்’ (E-hailing) ஓட்டுநர்களுக்கு இந்த வரம்பு பொருந்தாது என்றும் அவர்கள் உயர் வரம்பிற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், வெளிநாட்டினரும் பெரிய நிறுவனங்களும் இந்த இலக்கிடப்பட்ட ரோன் 95 பெற்றோலை வாங்க முடியாது, மாறாக மானியம், இல்லாத, RON 95 பெட்ரோலை லிட்டருக்கு RM2.60 விலையில் வாங்குவார்கள்.

மேலும் காவல்துறை ஆயுதப்படை உறுப்பினர்கள், செப்டம்பர் 27-ஆம் தேதி முதல், புதிய விலையில் இலக்கிடப்பட்ட ரோன் 95 பெட்ரோலை வாங்கி பயனடையலாம்.

அதுமட்டுமின்றி STR அரசாங்க உதவி, பெறும், பயனர்கள் செப்டம்பர் 28-ஆம் தேதி, முதல், இந்த விலையில், பெட்ரோலை, பெறலாம்.

மேலும் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here