சித்தியவான் விபத்தில் மோட்டார் சைக்கிளிலிருந்து தூக்கி எறியப்பட்டு ஒருவர் பலி

ஈப்போ,

சித்தியவான் அருகே சுங்காய் வாங்கி , தாமான் நேசா பகுதியில் நேற்று இரவு மோட்டார் சைக்கிளும் கார் ஒன்றும் மோதியதில், மோட்டார் சைக்கிளில் சென்றவர் தூக்கி எறியப்பட்டு உயிரிழந்தார்.

இன்று மாலை 7.34 மணிக்கு சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததையடுத்து சித்தியாவான் தீயணைப்பு நிலையத்திலிருந்து ஒரு குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டது என பேராக் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை செயல்பாட்டு உதவி இயக்குநர் ஷாஸ்லீன் மொஹமட் ஹனாபியா தெரிவித்துள்ளார்.

விபத்தில் ஹோண்டா EX5 மோட்டார் சைக்கிள் மற்றும் ஹோண்டா சிவிக் கார் என இரண்டு வாகனங்கள் சம்பந்தப்பட்டுள்ளன என்றார் அவர்.

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சுமார் 50 வயதுடைய ஆண் கம்பித் தூணில் மோதிய நிலையில் தூக்கி எறியப்பட்டார். சம்பவ இடத்துக்கு தீயணைப்புக் குழுவினர் வந்தபோது, கார் ஓட்டுநர் அங்கு இல்லை,” எனவும் அவர் கூறினார்.

சுகாதாரப் பணியாளர்கள், சம்பவ இடத்திலேயே அந்த நபர் இறந்துவிட்டதாக உறுதி செய்தனர். பின்னர் வழக்கு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here