கோலாலம்பூர்,
BUDI95 திட்டத்தின் கீழ் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்த , ரோன் 95 பெட்ரோல் தள்ளுபடி விலையில் குறைக்கப்பட்ட அறிவிப்பை வரவேற்றுள்ளார் துணை பிரதமர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி.
இந்த சிறந்த முடிவு மக்கள் நலனுக்கான ஒரு திட்டம் மற்றும் அவசியமான நடவடிக்கை என்று கூறினார். “நாட்டின் ஒரு தலைவராக, நான் இந்த முடிவை மிகவும் தீர்மானமான மற்றும் மக்கள் நலனில் கரிசனை நிறைந்ததாக பார்க்கின்றேன்,” என்று அவர் தனது பேஸ்புக் பதிவில் கூறினார்.
BUDI95 திட்டத்தின் கீழ், மலேசிய குடியுரிமையுடையவர்களுக்கு ரோன் 95 பெட்ரோல் விலை, செப் 30 முதல், ஒரு லிட்டருக்கு 2.05 ரிங்கிட் இருந்து 1.99 ரிங்கிட் வரை குறைக்கப்படும் என்பது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தள்ளுபடி விலை மலேசிய குடியுரிமை உடையவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். பிற நாடுகளின் குடியுரிமை கொண்டவர்கள் மற்றும் பெரிய கூட்டுறவு நிறுவனங்கள், சந்தை விலையில் 2.60 ரிங்கிட் என்ற நிலையான விலையை செலுத்த வேண்டியிருக்கும்.
“இன்ஷா அல்லாஹ், நாம் அரசு முயற்சிகளுக்கு ஆதரவு அளித்து, சீரிய, நிலையான மற்றும் உறுதியான மலேசியாவுக்கான திட்டங்களில் இணைந்திருப்போம்,” என்று அஹ்மட் ஜஹிட் கூறினார்.



















