குயெபாக்ஸ்: `ரோன்95’ மானியத்திற்கு வரவேற்பு!

கோலாலம்பூர்:

அரசாங்கத்தின் இலக்கிடப்பட்ட ரோன் 95 திட்டத்தை பொது சேவை ஊழியர்கள் சங்கங்களின் காங்கிரஸ் Cuepacs வரவேற்றுள்ளது.

இந்தத் இலக்கிடப்பட்ட பெட்ரோல் திட்டத்தின் வாயிலாக உதவி தேவைப்படுபவருக்கு சென்றடைவதை உறுதி செய்யும் அதே வேளையில், இந்தத் திட்டம் குறிப்பாக அரசாங்கத்தில் வேலை செய்யும் B40, M40 அரசாங்க ஊழியர்களுக்கு வெகுவாக பயன் அளிக்கும் என்றும் அது தெரிவித்துள்ளது.

இதனிடையே, இதுகுறித்து Cuepacsஇன் தலைவர், Datuk Dr. Adnan Mat கூறுகையில், இலக்கிடப்பட்ட மானியம் நாட்டின் நிதி நிலைமையை வலுவாக்கும் என்றும், இதன் வழி சேமிக்கப்படும் நிதியை இதர முக்கிய துறைகளான சுகாதாரம், கல்வி, பொது சேவை நலன் போன்றவற்றிற்கு பயன்படுத்துவதற்கு வழி வகுக்கும் எனவும் கூறினார்.

அதுமட்டுமின்றி வெளிப்படையான தகவல் பரிமாற்றம், இவ்வாறான கொள்கைகளுக்கு பொதுமக்களின் நம்பிக்கையை பெறுவதற்கும் அவர்களின் ஆதரவை பெறுவதற்கும் மிக முக்கியம் என்றும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக, செப்டம்பர் 30-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் இலக்கிடப்பட்ட ரோன் 95 பெட்ரோலின் விலை Budi 95 திட்டத்தின் கீழ் RM2.05லிருந்து, RM1.99ஆக குறைக்கப்பட்டுள்ளது என்றும், இதன் வாயிலாக 16 மில்லியன் மலேசியர்கள் பயன்பெறுவார்கள் என்றும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் அறிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here