மலாக்கா:
மடானி அரசாங்கம் இஸ்லாமிற்கு எதிரானது என்ற குற்றச்சாட்டை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாக மறுத்தார்.
மேலும் எதிர் கட்சியினர் தங்களின் அரசியல் லாபத்திற்கால சமய விவகாரங்களை பயன்படுத்துவதாகவும் அவர் சாடினார்.
பொதுவாக நான் யாரையும் குறித்து கருத்துரைக்க மாட்டேன். ஆனால் நமது மரியாதை வீணாகி விட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர். ஒருவர் சொல்கிறார்.
எனவே நானும் கேட்கிறேன். அவர்கள் ஆட்சியில் இருந்தபோது சூதாட்ட நடவடிக்கைகள் அதிகரித்ததா அல்லது குறைந்ததா? என்று இன்று நடைபெற்ற பி.கே.ஆர் கட்சியின் 27ஆம் ஆண்டு நிறைசி விழாவில் பேசிய அன்வார் கேள்வி எழுப்பினார்.
அதே சமயம் மடானி கொள்கைக்கு ஏற்ப நல்ல எண்ணத்தோடு விமர்சனங்கள் செய்தால் அதனை ஏற்க நான் தயார் என்றார் அவர்.




















