புக்கிட் காயூ ஹீத்தாம்,
பல்வேறு அரசியல் சர்ச்சைகளை எதிர்கொண்டு வருகின்ற போதிலும் பெரிக்காத்தான் நேஷனல் நாட்டின் 17ஆவது பொதுத் தேர்தல் வரையில் நீடிப்பது மட்டுமின்றி வலுவாகவும் உள்ளதாக கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் சனுசி கருத்துதைத்தார்.
அதே சமயம் நம்பிக்கை கூட்டணி – பாரிசான் நேஷனன் கூட்டணி எதிபார்த்ததை விட முன்கூட்டியே அதாவது சபா மாநில தேர்தலில் ‘சரிந்து விடும்’. அந்த மாநிலத்தின் தற்போதைய அரசியன் நிலவரத்தில் அடிப்படையில் அந்த கணிப்பு உள்ளது.
மேலும் சபா தேர்தலுக்கு பெரிக்காத்தான் இன்னும் எந்தவொரு பேச்சு வார்த்தையும் மேற்கொள்ளவில்லை. பிஎச் – பாரிசான் கூட்டணி சரிவதை முதலில் நாம் பார்ப்போம் என்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் அரசியல் நிலவரங்கள் அனைத்தையும் நாம் கூர்ந்து கவனித்து வருகின்றோம். பெரிக்காத்தான் உடைவதற்கு எந்த அறிகுறிகளும் இல்லை.
ஆனாலும் பாஸ் உட்பட அனைத்து அரசியல் கட்சிகள் – கூட்டணிகளும் வியூகங்களை கட்டமைக்குக் ஏற்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அளவிற்கு தற்போதைய அரசியல் சூழல் உள்ளதாகவும் பாஸ், பெரிக்காத்தான் தேர்தல் பிரிவு தலைமை இயக்குனருமான சனுசி கூறினார்.





















