புத்ரா ஜெயா:
நாட்டின் எல்லை கதவுகளில் சோதனை நடவடிக்கைகளுக்கு எல்லை பாதுகாப்பு, கட்டுபாடு இலாகா (ஏகேபிஎஸ்) அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்கிறது.
எல்லை பாதுகாப்பு, அமலாக்க கட்டுபாடுகளை வலுப்படுத்தும் அரசாங்கத்தின் செயல்பாடுகளில் இதுவும் ஓர் அங்கம் என்று மலேசிய சுங்கத்துறையின் தலைமை இயக்குனர் டத்தோ அனீஸ் ரிஸானா தெரிவித்தார்.
அமலாக்கத்தின் முதன் கட்ட செயல்பாடுகள் கடந்த ஜனவரி மாதம் கிளந்தான், ரந்தாவ் பாஞ்சாங்கில் தொடங்கப்பட்டது. அதில் 8 அதிகாரிகள் ஏகேபிஎஸ்விற்கு பணி மாற்றப்பட்டுள்ளனர்.
அதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட செயல்படுகள் நாளை தொடங்கி செயல்படுத்தப்படும். அதில் 1,045 அதிகாரிகள் பணி மாற்றம் செய்யப்படுவர். குறிப்பாக இந்த செயல்பாட்டில் 21 கூடுதல் எல்லை கதவுகள் உட்படுத்தப்படுகின்றன.
மேலும் இனி நாட்டின் எல்லை கதவுகளில் நபர்கள், வாகனங்கள், வர்த்தக பொருட்கள் மீதான சோதனை நடவடிக்கைகளை ஏகேபிஎஸ் மேற்கொள்ளும் என்று அவர் தமதறிக்கையில் விவரித்தார்.
அதே சமயம் தரை, கடல், வான் என அனைத்து எல்லை கதவுகளிலும் சுங்கத்துறை அதிகாரப்பூர்வமற்ற வரி விதிப்பாளராக தொடர்ந்து செயல்ப்படும் என்றார் அவர்.




















