கோலாலம்பூர்,
T4 Education நடத்திய விருதளிப்பில் ஆரோக்கியமான வாழ்வாதாரத்திற்கு ஆதரவளிக்கும் பிரிவில் அனைத்துலக ரீதியில் இவ்வாண்டில் சிறந்த பள்ளி என்ற விருதினை வென்றுள்ள புத்ரா ஜெயா பெர்சீண்ட் 11 தேசியப் பள்ளிக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அப்பள்ளியின் இந்த வெற்றியானது உலல அரங்கில் நாட்டின் பெயரை மேலும் மிளிரச் செய்துள்ளது.
அதிலும் பள்ளிகளில் அமல்படுத்தப்படும் சிறந்த செயல்பாடுகள், கண்டு பிடிப்புகள் உலகத்திற்கு முன்மாதிரியாக விளங்கக்கூடிய வல்லமையை கொண்டிருப்பதையும் இந்த வெற்றி நிரூபிக்கின்றது.
எதிர்கால கட்டமைப்பு, கற்பித்தல் ஆகியவற்றில் மலேசியா மடானி கொள்கை இருப்பதற்கு இதுதான் சரியான உதாரணம்.
அந்த பள்ளி, கல்வி அமைச்சு, இதில் சம்பந்தபட்ட அனைத்து தரப்பினருக்கும் எனது வாழ்த்துகள் என பிரதமர் தமது எக்ஸ் தளத்தில் கருத்து பதிவேற்றம் செய்துள்ளார்.























