அலோர் ஸ்டார்:
கெடாவில் வெள்ள நிலைமைகள் மெதுவாக மேம்பட்டு வரும் நிலையில், அங்குள்ள தற்காலிக நிவாரண மையத்தில் தங்கியுள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி, மொத்தம் 32 குடும்பங்களைச் சேர்ந்த 107 பேர் மட்டுமே தங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் செயல்பட்டு வரும் செக்கோலா கெபாங்க்சான் லாங்கர் (Sekolah Kebangsaan Langgar) பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்று, கெடா சிவில் பாதுகாப்பு படை (APM) துணை இயக்குநர் மேஜர் (PA) முகமட் சுஹைமி முஹமட் சைன் கூறினார்.



















