இந்த ஆண்டு 4,994 பகடிவதை சம்பவங்கள் பதிவு -துணைக் கல்வி அமைச்சர்

கோலாலம்பூர்:

ந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை 4,500 க்கும் மேற்பட்ட பகடிவதை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று துணைக் கல்வி அமைச்சர் லிம் ஹுய் யிங் தெரிவித்துள்ளார்.

அமைச்சகம் இதுவரை 4,994 அறிக்கைகளைப் பெற்றுள்ளது என்றும், இது கடந்த ஆண்டு 3,887 வழக்குகளாகவும், 2021 இல் 326 வழக்குகலாகவும் இருந்தது என்று இன்று புதன்கிழமை (நவம்பர் 1) நாடாளுமன்றத்தில் அவர் கூறினார்.

இந்த வழக்குகள் அனைத்தும் விசாரிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, அதற்காக ஆலோசனை (counselling) ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறோம் ” என்று லிம் கூறினார்.

மேலும் இச்சம்பவங்களுக்குரிய “காரணிகளை கண்டறிந்து வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்,” என்று அவர் கூறினார்.

பள்ளி பகடிவதை வழக்குகளை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சகத்திடம் டத்தோ முஹமட் பக்தியார் வான் சிக் (PH-பாலிக் பூலாவ்) கேட்ட கேள்விக்கே அவர் மேகண்டவாறு பதிலளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here