தேசிய உயர்கல்வி நிதி வாரியமான பிடிபிடிஎன், உயர்கல்வி அமைச்சின் கீழ் உள்ள ஓர் ஏஜென்சியாகும். கல்வி மேம்பாட்டுக்கான அணுகுமுறைகள் உத்தரவாதத்துடன் இருப்பதை உறுதிசெய்ய பல்வேறு முயற்சிகள், தரம் வாய்ந்த திட்டங்களைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறது PTPTN.
ஜூனியர் சூப்பர்ஹீரோ எஸ்.எஸ்.பி.என். சேமிப்புத் திட்டம், உலக சேமிப்பு தினத்தை முன்னிட்டு நடைமுறைப்படுத்தப்படும் பிடிபிடிஎன் காப்புரிமை சமூக பொறுப்புத் திட்டங்களில் ஒன்றாகும். இது 2023ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு 2025ஆம் ஆண்டிலும் தொடரப்படுகிறது.

2025ஆம் ஆண்டுக்கான ஜூனியர் சூப்பர்ஹீரோ எஸ்.எஸ்.பி.என். சேமிப்புத் திட்டம் துங்கு அம்புவான் அஃப்ஸான் மருத்துவமனையில் நடைபெற்றது. இதனை பிடிபிடிஎன் தலைவர் டத்தோஸ்ரீ நோர்லிஸா அப்துல் ரஹிம் நிறைவு செய்து வைத்தார். தேசிய மக்கள் தொகை குடும்ப மேம்பாட்டுத் துறை வாரிய (எல்பிபிகேஎன்) இயக்குநர் புவான் நூர்ஃபர்ஹானா லீ முகமட் ஸுல்கிப்லி லீ, பகாங் மாநில மக்கள் தொகை குடும்ப மேம்பாட்டுத்துறை வாரிய (எல்பிபிகேஎன்) இயக்குநர் போனிஃபேஸ் பாசின் நியிரோப், துங்கு அம்புவான் மருத்துவமனையின் நிர்வாகப் பிரிவு துணை இயக்குநர் புவான் வான் ஸாவியா வான் அபு பாக்கார், பிடிபிடிஎன் மூத்த நிர்வாகி புவான் வான் ஸாவியா வான் அபு பாக்கார், பகாங் மாநில பிடிபிடிஎன் அலுவலக இயக்குநர் புவான் சபிஸா ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
குழந்தைகளைப் பிரசவித்த தாய்மார்களுடன் இந்தத் திட்டத்தின் வாயிலாக பிடிபிடிஎன் தலைவர் கலந்துரையாடினார். 2025 அக்டோபர் மாதத்தில் பிறந்த 50 குழந்தைகளுக்காக மொத்தமாக 10,000 ரிங்கிட் நன்கொடையை பிடிபிடிஎன் வழங்கியது. ஒவ்வொரு குழந்தைக்கும் தலா 100 ரிங்கிட் எஸ்எஸ்பிஎன் தொடக்க கட்ட வைப்புத் தொகை, 100 ரிங்கிட் மதிப்பிலான குழந்தைகளுக்கான உபகரணங்கள் அடங்கிய அன்பளிப்புக் கூடைகள் இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டன.
பகாங் மாநில சுகாதாரத்துறை, குவாந்தான் துங்கு அம்புவான் அஃப்ஸான் மருத்துவமனையின் ஒத்துழைப்போடு இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
பிடிபிடிஎன்னும் பகாங் மாநில அரசும் 2024 ஆம் ஆண்டு முதல் ‘பெர்மாத்தா மாக்மூர்’ திட்டத்தின் மூலம் மூன்று முக்கிய ஒத்துழைப்பில் ஈடுபட்டன. இந்தத் திட்டம், 2025ஆம் ஆண்டில் பகாங் மாநிலத்தில் பிறக்கும் மலேசிய குடியுரிமைப் பெற்ற குழந்தைகளுக்கான ஒருமுறை உதவித்தொகையாக 300 ரிங்கிட் வழங்கும் அரசு முயற்சி ஆகும். குழந்தையின் பெற்றோர் குறைந்தபட்சம் 16 வயதிற்கும் மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
இதில், 250 ரிங்கிட் எஸ்எஸ்பிஎன் வைப்புத் தொகையாகவோ கூடுதல் சேமிப்பு தொகையாகவோ வழங்கப்படும். மீதமுள்ள 50 ரிங்கிட் குழந்தைகள் பயன்படுத்தும் பொருட்களாக வழங்கப்படும். பகாங் மாநில அரசின் பெர்மாத்தா மாக்மூர் திட்ட ஒத்துழைப்பு 2024 முதல் தொடங்கியது என்று பிடிபிடிஎன் தலைவர் டத்தோ டத்தோஸ்ரீ நோர்லிஸா அப்துல் ரஹிம் தெரிவித்தார். சேமிப்பு பண்பை ஊக்குவிப்பதை இது முக்கிய இலக்காகக் கொண்டிருக்கிறது.

2024 ஜனவரி முதல் 2025 அக்டோபர் 1 வரை, 11,853 குழந்தைகள் இந்த ஊக்கத்தொகையை பெற்றுள்ளனர்; இது 2.96 மில்லியன் ரிங்கிட்டை உட்படுத்தியதாகும்.2025 செப்டம்பர் மாதம் வரை, பகாங் மாநிலத்தில் எஸ்எஸ்பிஎன் சேமிப்பு கணக்குகளின் மொத்த வைப்பு 634.54 மில்லியன் ரிங்கிட் ஆகும் . மேலும் 387,408 சேமிப்புக் கணக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. சூப்பர்ஹீரோ வைப்பு கணக்குகள் மூலம் பகாங் மக்கள், தங்கள் பிள்ளைகளுக்கு உண்மையான சூப்பர்ஹீரோக்கள் ஆகிறார்கள். பெற்றோரின் அன்பையும் பொறுப்பையும் குறிக்கும் ஒரு நம்பிக்கையான சேமிப்பு முறை இது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
எஸ்எஸ்பிஎன் சேமிப்பு என்பது பிடிபிடிஎன் வழங்கும் சேமிப்பு திட்டமாகும். ஆண்டுக்கு 8,000 ரிங்கிட் வரை வருமான வரி விலக்கு, தக்காஃபுல் பாதுகாப்புத் தகுதியான குடும்பங்களுக்கு இலவசமாக 10,000 ரிங்கிட் வரையிலான இலவங் கிராண்ட்கள் சிறப்பான வட்டி விகிதாச்சாரம், அரசாங்கம் உத்தரவாதத்துடன் கூடிய பாதுகாப்பான சேமிப்பு,ஷாரியாவுக்குட்பட்ட திட்டமாகும் இது. 2004இல் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து 2025 செப்டம்பர் 30 வரை, மொத்த எஸ்எஸ்பிஎன் வைப்புத் தொகை 22.47 பில்லியன் ரிங்கிட்டாகும். மொத்தம் 7.16 மில்லியன் கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன.
பெர்மாத்தா மாக்மூர் திட்டத்தின் வாயிலாக எதிர்காலத்திலும் பல பயனுள்ள திட்டங்களை மக்களுக்காக செயல்படுத்துவதை பிடிபிடிஎன் தொடரும். பெர்மாத்தா மாக்மூர் திட்டத்தின் விரிவான தகவல்கள், விண்ணப்பங்களுக்கு permatamakmur. pahamg.gov.my இணையதளத்தை நாடலாம்.
பட விளக்கம் 1 – பிடிபிடிஎன் தலைவர் டத்தோஸ்ரீ நோர்லிஸா அப்துல் ரஹிம் (வலமிருந்து இரண்டாவது) உடன் பகாங் மாநில எல்பிபிகேஎன் இயக்குநர் புவான் நூர்ஃபர்ஹானா லீ, போனிஃபேஸ் பாசின் நியிரோப் எஸ்எஸ்பிஎன் நேட்மிப்பு திட்டத்திற்கான மாதிரி அட்டையையும் குழந்தைகளுக்கான அன்பளிப்பு கூடைகளையும் வழங்கியபோது.
படவிளக்கம் 2 – பிடிபிடிஎன் தலைவர் டத்தோஸ்ரீ நோர்லிஸா அப்துல் ரஹிம் (வலமிருந்து எட்டாவது), 2025ஆம் ஆண்டுக்கான ஜூனியர் சூப்பர்ஹீரோ எஸ்.எஸ்.பி.என். சேமிப்பு திட்டம் அறிமுகத்தின்போது புதிதாகப் பிறந்த குழந்தைகளுடன் காணப்படுகிறார்.





















