தஞ்சோங் மாலிம் சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு – கணவர் காயம்

கோலாலம்பூர்:

தஞ்சோங் மாலிம் அருகே நேற்று பிற்பகல் நடைபெற்ற ஒரு சாலை விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார், அவரது கணவர் லேசாக காயமடைந்தார்.

இந்த விபத்து, ஈப்போ–கோலாலம்பூர் தேசிய நெடுஞ்சாலையின் (ஜாலான் பெர்சேகுடுவான்) 96ஆவது கிலோமீட்டரில், பிற்பகல் 3 மணியளவில் நிகழ்ந்தது என்று, முஅல்லிம் மாவட்ட துணை காவல்துறைத் தலைவர் DSP சுஹைமி முகமட் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட 32 வயதான நூர் சியுஹாதா முகமட் யூசோஃப், சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அவரது கணவர், 34 வயதானவர், லேசான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

“முதற்கட்ட விசாரணையில், கணவர் ஓட்டிச் சென்ற டொயோட்டா வியோஸ் கார் ஈப்போவிலிருந்து கோலாலம்பூர் நோக்கிச் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து சறுக்கி, சாலைதடுப்பில் மோதியதாகவும், பின்னர் எதிர் பாதையில் திரும்பியதாகவும் தெரியவந்துள்ளது,” என்று சுஹைமி தெரிவித்தார்.

நூர் சியுஹாதாவின் உடல் மேலதிக பரிசோதனை மற்றும் நடவடிக்கைகளுக்காக சிலிம் ரிவர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41(1) (அபாயகரமான ஓட்டுதல் மூலம் மரணம் ஏற்படுத்துதல்) கீழ் விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here