கந்த சஷ்டி வழிபாடு

ஐப்பசி மாதத்தில் தீபாவளி முடிந்த பிறகு வரும் தொடர்ச்சியான ஆறு நாட்களில்கந்த சஷ்டி விரதத்தை மேற்கொள்கிறோம். திருச்செந்தூர் முருகனை நினைத்து வழிபாடு செய்ய வேண்டிய அற்புதமான ஒரு விரத நாளாக இந்த கந்த சஷ்டி திகழ்கிறது. இந்த கந்த சஷ்டி தொடர்ச்சியாக ஆறு நாட்கள் மேற்கொள்ள வேண்டியது தங்களால் இயலும் பட்சத்தில் முறையான விரதத்தை மேற்கொண்டு முருகப்பெருமானை வழிபாடு செய்யலாம்.

 

உடல் சூழ்நிலை காரணமாக விரதம் இருக்க இயலாதவர்கள் எளிமையான வழிபாட்டு முறைகளை பின்பற்றியும் முருகப்பெருமானை வழிபாடு செய்து தங்களுடைய வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்ளலாம். அந்த வகையில் கந்தசஷ்டியின் முதல் நாள் அன்று செய்ய வேண்டிய வழிப்பாட்டு முறையை பற்றி தான் நாம் பார்க்க போகிறோம்.

 

முருகப்பெருமானை வழிபாடு செய்வதற்கு உகந்த அதி அற்புதமான ஒரு நாளாக தான் கந்தசஷ்டி திருநாள் திகழ்கிறது. தொடர்ச்சியாக ஆறு நாட்கள் மேற்கொள்ளக்கூடிய இந்த விரத நாட்களில் முருகப்பெருமானை யார் ஒருவர் முழு மனதோடு நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்கிறார்களோ அவர்களுக்கு முருகப்பெருமானின் அருளால் வாழ்க்கையில் அனைத்து விதமான நன்மைகளும் உண்டாகும் என்றும் அவர்களை கஷ்டப்படுத்தக்கூடிய எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் அது அவர்களை விட்டு விலகும் என்றும் கூறப்படுகிறது. முக்கியமானது இந்த கந்த சஷ்டி விரதத்தை குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மேற்கொள்வார்கள்.
குழந்தை பாக்கியம் மட்டுமல்லாமல் வேறு எந்த ஒரு வேண்டுதலாக இருந்தாலும் அதை முன்வைத்து முருகப்பெருமானை இந்த ஆறு நாட்களும் வழிபாடு செய்யும் பொழுது சிறப்பான நல்ல பலன் கிடைக்கும்.
கந்த சஷ்டியின் முதல் நாள் என்பது அக்டோபர் மாதம் 22ஆம் தேதி புதன்கிழமை அன்று வருகிறது. அன்றைய நாளில் நாம் நம்முடைய வீட்டில் இருக்கக்கூடிய முருகப் பெருமானின் படத்திற்கு முன்பாகவோ சிலைக்கு முன்பாகவோ வேலுக்கு முன்பாகவோ சர்கோணம் கோலம் போட வேண்டும். சரவணபவ என்ற முருகப்பெருமானின் மந்திரத்தை எழுதி இருக்க வேண்டும். வீட்டில் முருகப் பெருமானின் சிலை, வேல் இருக்கும் பட்சத்தில் பால் அபிஷேகம் செய்து வாசனை மிகுந்த மலர்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள்.
சக்கோண கோலத்தில் ச என்னும் எழுத்திற்கு மேலே ஒரு அகல் விளக்கில் நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றுக் கொள்ளுங்கள். பிறகு நெய்வேத்தியமாக கோதுமையால் செய்யப்பட்ட உணவுகள் மற்றும் சர்க்கரைப் பொங்கலை வைக்கலாம். அடுத்ததாக வாசனை மிகுந்த மலர்களை பயன்படுத்தி “ஓம் நமோ சரவணபவ” என்னும் மந்திரத்தை 111 முறை கூறி முருகப்பெருமானுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.
இந்த வழிபாட்டை அக்டோபர் மாதம் 22ஆம் தேதி பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்யலாம் அல்லது காலை 6:00 மணியிலிருந்து 7:00 மணிக்குள் செய்யலாம் அல்லது காலை 9:15 மணியிலிருந்து 10:15 மணிக்குள் செய்யலாம் அல்லது மாலை 5:30 மணியிலிருந்து 7:30 மணிக்குள் செய்யலாம். வழிபாட்டை நிறைவு செய்யும் வகையில் கற்பூர தீப தூப ஆராதனை காட்ட வேண்டும்.
முருகப்பெருமானின் அருளை பரிபூரணமாக பெறவேண்டும் என்று நினைப்பவர்கள் முருகப்பெருமானுக்குரிய நாட்களில் விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டும் அப்படி விரதம் இருக்கக்கூடிய முக்கியமான நாட்களில் ஒன்றாக திகழ்வதுதான் கந்தசஷ்டி திருவிழா இந்த நாளில் நாம் முருகப்பெருமானை நினைத்து செய்யக்கூடிய எந்த ஒரு வழிப்பாடாக இருந்தாலும் அதன் பலனை நம்மால் முழுமையாக பெற முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here