கோலாலம்பூர்:
ஜூன் 30 நிலவரப்படி, நாடுமுழுவதும் சுகாதார அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள மொத்தம் 53,185 மருத்துவ அதிகாரிகள் பணியாற்றுகின்றனர் என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிஃப்லி அஹ்மட் தெரிவித்துள்ளார்.
இதில்: 39,310 பேர் நிரந்தர மருத்துவ அதிகாரிகள், 13,875 பேர் ஒப்பந்த மருத்துவ அதிகாரிகள் என்றும், அவர்களில் 33,182 (62.4%) மருத்துவ அதிகாரிகள் நாடு முழுவதும் உள்ள பொது மருத்துவமனைகளில் பணியாற்றுகின்றனர் என்றும் அவர் சொன்னார்.
குறித்த மருத்துவ அதிகாரிகளில் நிபுணர்கள் — 6,715 (6,703 நிரந்தரம், 12 ஒப்பந்தம்), மருத்துவ அதிகாரிகள் — 26,467 (15,274 நிரந்தரம், 11,193 ஒப்பந்தம்) என்று, கம்பார் எம்.பி. சோங் ஜெமினின் (PH–கம்பார்) கேள்விக்கு அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் அமைச்சர் விளக்கினார்.
டாக்டர் சுல்கிஃப்லி மேலும் கூறுகையில் “தனியார் துறை மற்றும் வெளிநாடுகளுக்கு மருத்துவர்கள் இடம்பெயர்வது புதிய பிரச்சினை அல்ல. இதற்கு சம்பளமே முக்கிய காரணம்.” என்று அவர் சொன்னார்.





















