கோலாலம்பூர்:
அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் அகதிகள் பதிவு ஆவண (DPP) முறையை அரசாங்கம் செயல்படுத்தவுள்ளது .
ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஆணையர் (UNHCR) நிர்வகிக்கும் தற்போதைய பதிவு முறையை மாற்றுவதற்கான தேசிய பாதுகாப்பு கவுன்சில் உத்தரவு எண் 23 இன் படி, பாதுகாப்பு அபாயங்கள் மற்றும் ஒழுங்கற்ற தரவுகளை சமாளிக்க இந்த முயற்சி அமைக்கப்பட்டதாக துணை உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஷம்சுல் அனுவார் நசாரா கூறினார்.




















