திருவண்ணாமலையில் ஏற்றப்படும் கார்த்திகை மகாதீபத்தை நேரில் கண்டவர்களின் குடும்பத்தில் உள்ள 21 தலைமுறையினருக்கு முக்தி கிடைக்கும்.
திருவண்ணாமலை மகாதீபத்தை தரிசித்த படி, “ஓம் நம சிவாய” என்று சொன்னால் அந்த மந்திரத்தை மூன்று கோடி முறை உச்சரித்த பலன் கிடைக்கும்.
தீபத்திருநாளில் திருவண்ணாமலையில் ஐந்துமுறை கிரிவலம் வர பாவங்களில் இருந்து முழுவதுமாக விடுபட முடியும்.
கார்த்திகை தீபத்தன்று கிரிவலம் செல்பவருக்கு ஆயிரம் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.
கார்த்திகை தீபத்தன்று சிவலிங்கம் முன்பு நெய் விளக்கேற்ற, வாழ்க்கை பிரகாசமாகும்.
திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றும் சமயம் அங்கு இருந்து தரிசித்தால், குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும்.
கார்த்திகை மகாதீபத்தன்று திருவண்ணாமலையில் அதிகாலையில் பரணி தீபம் ஏற்றுவார்கள். இந்த விளக்கை பைரவர் சன்னதியில் கொண்டு வைப்பார்கள். மாலையில் அந்த விளக்கின் சுடரை எடுத்துச் சென்று, மலை உச்சியில் மகா தீபம் ஏற்றுவார்கள். இந்த தீபம் தொடர்ந்து 11 நாட்களுக்கு எரியும்.
திருவண்ணாமலையில் மகாதீபம் எரியும் 11 நாட்களும் இரவு, பகல் எந்த நேரம் வேண்டுமானாலும் கிரிவலம் செல்லலாம். சிவனே ஜோதி வடிவமாக காட்சி தருகிறார் என்பதால் சிவ பக்தர்கள் மகாதீபத்தை தரிசித்து, அதை வணங்கிய படி கிரிவலம் செல்வது மிகப் பெரிய புண்ணியத்தை அளிக்கும்.
திருவண்ணாமலை மகாதீபத்தை நேரில் தரிசிக்க முடியாதவர்கள், தீபம் ஏற்றும் சமயத்தில் அதை மனதில் நினைத்து வழிபட்டாலே அதற்கு பலன் கிடைக்கும்.
திருக்கார்த்திகை தீபம் அன்று திருவண்ணாமலைக்கு நேரில் செல்ல முடியாதவர்கள் வீட்டில் இருந்த படியோ அல்லது அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று சிவ வழிபாடு செய்யலாம்.