பண்டார் பெர்மைசூரியில் கோர விபத்து: கார் லோரியுடன் மோதியதில் மாது மரணம்

பண்டார் பெர்மைசூரி:

திரெங்கானு, பண்டார் பெர்மைசூரிக்கு அருகிலுள்ள கம்போங் தெலகா புடாட் பகுதியில், ஜாலான் பந்தாய் கோலா திரங்கானு-பெர்மைசூரியின் 50வது கிலோமீட்டரில், நேற்று (டிசம்பர் 13, சனிக்கிழமை) மாலை ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.

நேற்று மாலை சுமார் 6.11 மணியளவில் விபத்து நிகழ்ந்தது என்றும், 32 வயதான துவான் நூர் அமிரா துவான் அஸ்ஹார் (Tuan Nur Amirah Tuan Azhar), கம்போங் பாக் கஞ்சில் லுவார் பகுதியைச் சேர்ந்த கார் விற்பனையாளரான இவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது என்று, செத்தியூ மாவட்ட காவல்துறைத் தலைவர் சுப்ரின்டென்டன்ட் முஹமட் ஜைன் மாட் டிரிஸ் தெரிவித்தார்.

கோலா திரெங்கானுவில் இருந்து கிளாந்தானின் பாசிர் பூட்டே நோக்கி அப்பெண் சிறிய வகை காரை ஓட்டிச் சென்றுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்தபோது, அவரது கார் திடீரென எதிர்த் திசையில் உள்ள பாதைக்குள் நுழைந்ததாக நம்பப்படுகிறது. அப்போது, பந்தாய் பெனாரிக்கில் இருந்து கம்போங் ரஹ்மத் நோக்கி செம் பனம்பழங்களை ஏற்றிச் சென்ற ஹினோ லோரி மீது மோதி விபத்துக்குள்ளானது,” என்று அவர் கூறினார்.

மோதலின் தாக்கத்தால், காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. அதேநேரம் லோரி சாலையிலேயே கவிழ்ந்தது. இருப்பினும், 41 வயதான லோரி ஓட்டுநர் காயமின்றி தப்பினார்.

உயிரிழந்த பெண்ணின் உடல் மேலதிக நடவடிக்கைக்காகச் சேதியு மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டது. இந்தச் சம்பவம் 1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41(1)-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக முஹமட் ஜைன் மாட் டிரிஸ் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here