சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் 2035ஆம் ஆண்டுக்குள் நால்வரில் ஒருவர் கடுமையான சிறுநீரகப் பாதிப்பால் அவதியுறக்கூடும் என புள்ளிவிவரங்கள் எச்சரிக்கின்றன.
தற்போது, சிங்கப்பூரில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்காக காத்திருப்போர் எண்ணிக்கை சுமார் 400 ஆக உயர்ந்துள்ளது. இரு ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, ஒருவருக்குச் சிறுநீரகம் கிடைப்பதற்குச் சராசரியாக 9 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
தேசிய சிறுநீரக அறநிறுவனம் (NKF) வெளியிட்ட தகவலின்படி, ஒவ்வொரு நாளும் 6 புதிய நோயாளிகளுக்கு சிறுநீரகச் சுத்திகரிப்பு (டயாலிசிஸ்) தேவைப்படுகிறது. இது 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்த எண்ணிக்கையை விட இரட்டிப்பு அளவிற்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, SBWS – Singapore Buddhist Welfare Services ஆதரவுடன் செயல்படும் NKF Dialysis Centres மூலம் நோயாளிகளுக்கு தொடர்ந்து சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
சிறுநீரகப் பாதிப்பால் அவதிப்படுவோர் எண்ணிக்கையில் சிங்கப்பூர் தற்போது உலக அளவில் நான்காவது இடத்தில் உள்ளது.





















