கோத்தா பாரு:
தொடர்ச்சியான கனமழை மற்றும் ஆற்று நீர்மட்டம் அபாய அளவை விட உயர வாய்ப்புள்ளதன் காரணமாக, கிளந்தானின் பல மாவட்டங்களுக்கு நீர்ப்பாசன மற்றும் வடிகால் துறை (DID)வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேற்று (திங்கட்கிழமை) மலேசிய வானிலை ஆய்வுத் துறை (MetMalaysia) வெளியிட்ட தொடர்ச்சியான மழை எச்சரிக்கையை (மோசமான வானிலை நிலை) அடுத்து, இன்று (டிசம்பர் 16) முதல் வெள்ளிக்கிழமை வரை வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது என்று தேசிய வெள்ள முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை மையம் (PRABN) நேற்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்வெள்ளப்பெருக்கு எதிர்பார்க்கப்பட்ட நேரத்தை விட முன்னதாகவோ அல்லது தாமதமாகவோ ஏற்படலாம் என்று PRABN தெரிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள், குறிப்பாக அபாயப் பகுதிகளில் வசிப்பவர்கள், தொடர்ந்து விழிப்புடன் இருக்குமாறும் மேலும் அதிகாரிகள் மற்றும் பேரிடர் மேலாண்மை ஏஜென்சிகளின் அறிவுறுத்தல்களுக்குக் கட்டாயம் இணங்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.





















