ஸ்மார்ட் நெக்ஸ்ட் ஜென் திட்டத்தின் வழி மாணவர்களுக்கு நிதி நிர்வாகப் புரிதல் பிடிபிடிஎன் முன்னெடுப்பு

கோலாலம்பூர்,

உயர்கல்வி அமைச்சின் கீழ் செயல்படும் பிடிபிடிஎன் எனப்படும் தேசிய உயர் கல்வி நிதி வாரியம் உயர் கல்வி மையங்களுக்கும் நாட்டின் உயர்கல்வித் துறைக்கும் ஒரு வலுவான இணைப்புப் பாலமாகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. பல்வகை திட்டங் களின் வழி கல்வி, மாணவர் நலன்களை உயர்த்துவதில் துணைபுரிந்து வருகிறது.

அவ்வகையில் யுஐடிஎம் எனப் படும் மாரா தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவர் களுடன இணைந்த பிடிபிடிஎன் ஸ்மார்ட் நெக்ஸ்ட் ஜென் திட்டத்தை நேற்று ஷா ஆலம் யுஐடிஎம் பல்கலைக்கழகத்தில் நடத்தியது. இத்திட்டமானது அதன் சமூக காப்பரெட் பொறுப்புடைமைத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட ஒரு திட்டமாகும். இதில் கல்வியை முடித்ததும் புதிய வேலையில் சேர்வதற்கு மாணவர்களை முன்கூட்டியே தயார் செய்வ தற்கு துறை சார்ந்த அனுபவங் களையும் அறிவாற்றலையும் பகிர்ந்து கொள்ளும் நோக்கத்தை இத்திட்டம் கொண்டிருக்கிறது.

அதேசமயத்தில் இத்திட்டத்தின் வழி நிதி நிர்வாகம், சேமிப்புத் திட்டமிடல், கடன் நிர்வாகம் ஆகியவை குறித்து மாணவர் களுக்கு ஒரு புரிதலையும்
விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வரும் இத்திட்டத்தின் ஓர் அங்கமாக இருந்தது என்று பிடிபிடிஎன் தலைவர் டத்தோஸ்ரீ நோர்லிஸா அப்துல் ரஹிம் கூறினார்.

ஸ்மார்ட் நெக்ஸ்ட் ஜென் திட்டத்தில் பங்கேற்ற மாணவர்களுடன் டத்தோஸ்ரீ நோர்லிஸா அப்துல் ரஹிம் (நடுவில்).

இதற்காக ஸ்மார்ட் நெக்ஸ்ட் ஜென் திட்டமானது இத்துறை யில் நிபுணத்துவம் பெற்ற வல்லுநர்களையும் தன்முனைப்பு நிபுணர்களையும் அழைத்து மாணவர்களுக்கு அதன் முக்கியத்துவத்தைப் புரிய வைப்பதற்கும் ஏற்பாடு செய் திருந்தது. மாணவர்கள் கல்வியில் மட்டு மன்றி நிதி, சேமிப்பு, எதிர்கால பொறுப்புகள் ஆகியவற்றில் சிறந்தவர் களாக இருக்க வேண்டும் என்ப தற்கு வழி காட்டுவ தற்கும் பிடிபிடிஎன் அதன் பங் களிப்பை வழங்கி இருக்கிறது.இந்நிகழ்ச்சியில் யுஐடிஎம் மாணவர் நலப் பிரிவு துணைவேந்தர் பேராசிரியர் மட்யா, டாக்டர் ஃபட் ருல் இஸா, உயர் அதிகாரிகள், பிடிபிடிஎன் உயர் நிர்வாக அதிகாரிகள் ஆகி யோர் கலந்து கொண்டனர்.

சகலந்துரையாடலில் பங்கேற்ற டத்தோஸ்ரீ நோர்லிஸா அப்துல் ரஹிமுடன் அதிரா கமாருஸமான், முகமட் நூர் ஸக்காரியா.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here