ஈப்போவில் பயங்கரம்: அடுத்தடுத்து இரண்டு தீ விபத்துகள் – 6 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் 4 வீடுகள் நாசம்!

ஈப்போ:

ப்போவில் இன்று நிகழ்ந்த இரண்டு வெவ்வேறு தீ விபத்துகளில் ஆறு அடுக்குமாடி குடியிருப்புகள் கிட்டத்தட்ட முழுமையாக எரிந்து சாம்பலாகின. மேலும் நான்கு மாடி வீடுகள் பலத்த சேதமடைந்தன.

முதலாவது சம்பவம், ஜாலான் சுல்தான் நஸ்ரின் ஷா (Jalan Sultan Nazrin Shah) பகுதியில் உள்ள நேஷனல் கார்டன் அடுக்குமாடி குடியிருப்பில் மதியம் 1.49 மணியளவில் முதல் தீ விபத்து ஏற்பட்டது.

முதலில் மூன்று வீடுகளில் தொடங்கிய தீ, அதிவேகமாக அடுத்த மூன்று வீடுகளுக்கும் பரவியது. இதில் 6 வீடுகள் சுமார் 90 சதவீதம் சேதமடைந்தன. வீடுகளின் கதவுகள் உட்புறமாகப் பூட்டப்பட்டிருந்ததாலும், இரும்புக் கிரில் கதவுகள் இருந்ததாலும் தீயணைப்பு வீரர்கள் உள்ளே நுழைந்து தீயை அணைக்கப் பெரும் போராட்டத்தை எதிர்கொண்டனர்.

மாலை 5.49 மணியளவில் மீட்புப் பணிகள் முழுமையாக நிறைவடைந்தன. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.லை.

இரண்டாவது தீ சம்பவம், மாலை 4 மணியளவில் மெங்லெம்பு (Menglembu) அருகே உள்ள கம்போங் குவாலா பாரி ஹிலிரில் இரண்டாவது தீ விபத்து நிகழ்ந்தது.

இதில் நான்கு ஒற்றை மாடி வீடுகள் தீப்பற்றி எரிந்தன. அவற்றில் இரண்டு வீடுகள் 90 சதவீதமும், மற்ற இரண்டு வீடுகள் முறையே 50 மற்றும் 30 சதவீதமும் சேதமடைந்தன.

இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட 4 குடும்பங்களைச் சேர்ந்த 22 பேர் (7 குழந்தைகள், ஒரு முதியவர் மற்றும் ஒரு மாற்றுத்திறனாளி உட்பட) கம்போங் குவாலா பாரி சமூகக் கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக நிவாரண மையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு சம்பவங்களிலும் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை எனப் பேராக் மாநிலத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உறுதிப்படுத்தியுள்ளது. தீ விபத்துக்கான காரணங்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here