சிரம்பான், நீலாய் பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் 77 ஆவணமற்ற வெளிநாட்டினர் கைது

சிரம்பான், நீலாய் பகுதியிலும் 13 இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 77 ஆவணமற்ற வெளிநாட்டினரை குடிநுழைவுத் துறை கைது செய்துள்ளது. ஜனவரி 6 ஆம் தேதி நடைபெற்ற நடவடிக்கையின் போது 395 வெளிநாட்டினர் பரிசோதிக்கப்பட்டதாக மாநில குடிநுழைவுத்துறை தலைவர் கென்னித் டான் ஐக் கியாங் தெரிவித்தார்.

77 பேரில் 55 பேர் நிலாவில் உள்ள ஒரு சோப்பு உற்பத்தி தொழிற்சாலையில் நடத்தப்பட்ட சோதனையின் போது பிடிபட்டனர். அதில் ஆறு பேர் பெண்கள் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்கள் 19 முதல் 47 வயதுக்குட்பட்டவர்கள் என்று டான் கூறினார். சோதனையின் போது தலா 26 இந்தியர்கள் மற்றும் வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டனர். மற்றவர்கள் பாகிஸ்தானியர்கள் (10), தாய்லாந்து (ஆறு), மியான்மர் நாட்டவர்கள் (ஐந்து) மற்றும் இந்தோனேசியர்கள் (நான்கு) ஆவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here