தாய்லாந்தின் நாரதிவாட் மாகாணத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மீது தாக்குதல்; ஊரடங்கு உத்தரவு அமல்

கோலாலம்பூர்:

நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 11, 2026) அன்று தெற்கு தாய்லாந்தின் நாரதிவாட் (Narathiwat), யாலா (Yala) மற்றும் பட்டாணி (Pattani) ஆகிய மூன்று மாகாணங்களில் உள்ள 11 எரிபொருள் நிரப்பு நிலையங்களை இலக்காகக் கொண்டு வெடிகுண்டுத் தாக்குதல்களும் தீவைப்புச் சம்பவங்களும் நடத்தப்பட்டன.

இந்தத் தாக்குதல்களில் ஒரு போலீஸ் அதிகாரி மற்றும் மூன்று ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.

பாதிக்கப்பட்ட 11 நிலையங்களில் 5 நிலையங்கள் நாரதிவாட் மாகாணத்தில் அமைந்துள்ளன.

பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட, நாரதிவாட் மாகாணத்தில் (மலேசிய எல்லை நகரமான சுங்கை கோலோக் உட்பட) உடனடி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குற்றவாளிகள் தப்பிச் செல்வதைத் தடுக்க எல்லைச் சோதனைச் சாவடிகளில் ராணுவமும் போலீசாரும் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தச் சம்பவத்தில் மலேசியர்கள் யாரும் நேரடியாகப் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

இருப்பினும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குப் பயணம் செய்பவர்கள் அல்லது அங்கு வசிக்கும் மலேசியர்கள் விழிப்புடன் இருக்குமாறும், பாதுகாப்பு மண்டலங்களைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

2004-ம் ஆண்டு முதல் தெற்கு தாய்லாந்தில் தன்னாட்சி கோரி கிளர்ச்சியாளர்களால் நடத்தப்படும் போராட்டங்களால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here